/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
சவுதியில் இறந்த தமிழர் உடலை தாயகம் அனுப்பி வைத்த இந்தியன்ஸ் வெல்பேர் போரம்

மார் 16, 2026

சவுதியில் இறந்த தமிழர் உடலை தாயகம் அனுப்பி வைத்த இந்தியன்ஸ் வெல்பேர் போரம்
சவுதி அரேபியா அல் கசிமண்டலம் புரைதாவில் ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம் சிக்கலை அடுத்துள்ள ஆய்குடியைச் சேர்ந்த முனியசாமி ஆண்டி என்பவர் உடல்நிலை சரியில்லாமல் புரைதா மருத்துவமனையில் இறந்தார்.
அவரின் உடலை தாயகம் அனுப்பித் தர வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைமை பிரதிநிதி ஹுசைன் கனி, இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அல் கசிம் மண்டல தலைவர் மங்களக்குடி பக்கீர்முஹைதீனிடம் கோரிக்கை வைத்தார்.
மண்டல தலைமை நிர்வாகிகளானதிருச்சி ரிஸ்வான், மும்பை முஜீப்ரஹ்மான், மதுரை டாக்டர் ஆண்டோ, வடக்காத்தூர் முஹம்மது அன்சார், வடகரை ஹுஸைன் ஹஜரத், சிறு கடம்பூர் ஜாகிர் உசேன், நாகர்கோயில் அமீர் ஹுசைன் ஆகியோரைமங்கலக்குடி பக்கீர் மைதீன் தலைமையில் ஒருங்கிணைத்து,
முனியசாமி வேலை செய்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அவருக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகைகளை பெற்று தூதரகத்தின் மூலம் தாயகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு அவரது உடலை அனுப்புவதற்கான ஆவணங்களை சரி செய்து நல்ல முறையில் அவர் உடலை 14/3/2026 அன்று தாயகம் அனுப்பி வைத்தனர்.
இதற்காக பாடுபட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் ஒத்துழைப்பு வழங்கிய நிறுவனத்தார்களுக்கும் அனுசரணை வழங்கிய ரியாத் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் போரம் நன்றி தெரிவித்தது.
உடலைப் பெற்றுக் கொண்டு அந்த குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றியை இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அல்கசிம் மண்டல நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொண்டார்கள்.
Advertisement