/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அயலக தின மாநாட்டில் இந்தியர்கள்/தமிழர் நல்வாழ்வு பேரவை நிர்வாகிகள் பங்கேற்பு
/
அயலக தின மாநாட்டில் இந்தியர்கள்/தமிழர் நல்வாழ்வு பேரவை நிர்வாகிகள் பங்கேற்பு
அயலக தின மாநாட்டில் இந்தியர்கள்/தமிழர் நல்வாழ்வு பேரவை நிர்வாகிகள் பங்கேற்பு
அயலக தின மாநாட்டில் இந்தியர்கள்/தமிழர் நல்வாழ்வு பேரவை நிர்வாகிகள் பங்கேற்பு
ஜன 16, 2025

அயலக தின மாநாட்டில் இந்தியர்கள்/தமிழர் நல்வாழ்வு பேரவையின் சவுதி அரேபியா ஒருங்கிணைப்பாளர் மீமிசல் நூர் முஹம்மது, குவைத் மண்டலத் தலைவர் லால்குடி ஜபருல்லாஹ் கான், கத்தார் மண்டலத் தலைவர் முகைதீன் ஷா, ரியாத் மண்டல துணைச் செயலாளர் அரசை ஆஸிக் இக்பால், விழிச் செயலாளர் திண்டுக்கல் MSA சேக் அப்துல்லாஹ், கத்தார் நிர்வாக குழு உறுப்பினர் மும்பாலை ஜஹாங்கீர் ஜித்தா மண்டல துணைத் தலைவர் அப்துல் சமது கிழக்கு மண்டல நிர்வாகிகள் துணைத் தலைவர் காயல் இஸ்மாயில் கிழக்கு மண்டல ஆலோசகர் பொறியாளர் ஜக்கரிய்யா, கிழக்கு மண்டல திண்டுக்கல் அப்துல் சமத் மாநில தலைமை பிரதிநிதி சிக்கல் ஹுசைன் கனி SMI துணைச் செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது ஆர். புதுப்பட்டினம் OMS ரியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்டாலில் வெளிநாடுகளில் இந்தின்ஸ்/தமிழர் வெல்ஃபேர் ஃபோரம் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றும் மக்கள் பணிகளை தாங்கிய காணொளி காட்சி அனைவரும் காணும் வகையில் ஒளிபரப்பப்பட்டது. பேரவை செயல்பாடுகளின் தொகுப்பு பதாதைகள் வைக்கப்பட்டது. வெளிநாட்டு மண்டலங்களில் செயல்பாடுகள் அடங்கிய துண்டு பிரசுரம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்த அரங்கிற்கு உலகெங்கும் தமிழ் பணி செய்யும் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பல்வேறுபட்ட அமைப்புகளின் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், திரை உலகப் பிரமுகர்கள், பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த தமிழ் உறவுகள் வருகை தந்து செயல்பாடுகளை கேட்டறிந்தார்கள்.
அயலக மக்களின் நலன் சார்ந்த அயல்கத்துறைக்கு பல்வேறுகள் கோரிக்கை அடங்கி கடிதத்தை மண்டலத் தலைவர் மீமிசல் நூர் முஹம்மது மற்றும் நிர்வாகிகள் தமிழக அரசிடம் கொடுத்தனர். மேலும் விரைந்து நடவடிக்கைகள் வளைகுடா, ஐரோப்பா, ஆசியா கண்டங்கள் என 50 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழர்கள் சென்னை வர்த்தக மையத்தில் சங்கமித்தனர்.
விமான நிலைய வரவேற்பு, தங்குமிட ஏற்பாடு, அரங்கத்திற்கு அழைத்து செல்லுதல், அரங்கத்தில் உணவு உபசரிப்பு என மிகச் சிறப்பான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து இருந்தது. இதற்காக அல்லும் பகலும் உழைத்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவருக்கும் இந்தியன்ஸ்/தமிழர் வெல்ஃபேர் ஃபோர்ம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- தினமலர் வாசகர் ஷாஜஹான் யான்பு
Advertisement