/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பிரத்யேக சமூக ஆரோக்கிய அட்டை அறிமுகம்
/
பிரத்யேக சமூக ஆரோக்கிய அட்டை அறிமுகம்
பிப் 27, 2025

அபீர் மருத்துவ குழுமத்தின் ஜெத்தா ஹசன் கசாவி மருத்துவமனை ஜெத்தா தமிழ் சமூகத்திற்கென பிரத்யேக சமூக ஆரோக்கிய அட்டையை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியது. இது அதன் உறுப்பினர்களுக்கு மதிப்புக்குரிய சுகாதார நலன்களையும் சலுகை களையும் வழங்கும். இந்த நிகழ்வில், ஜெத்தா அனைத்து தமிழ் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் நிர்வாகிகள் , ஆசிரியர்கள், விளையாட்டு முன்னணி நபர்கள், சமூக பணியாளர்கள், மனிதநேய சேவகர்கள், ஹஜ் தன்னார்வலர்கள், கலாச்சார மற்றும் தமிழ் மொழி செயற்பாட்டாளர்கள் மற்றும் முக்கிய சமூக உறுப்பினர்கள் “ஜெத்தா தமிழ் சமூகம்” என்று ஒருங்கிணைந்து ஒற்றுமையாக குடும்பத்தினருடனும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
ஜெத்தா தமிழ் சமூகத்தின் சார்பாக இந்நிகழ்வினை பொறியாளர் காஜா மைதீன் ஒருங்கிணைத்து நடத்தி அபீர் மருத்துவ குழும தலைவர் முகம்மது அலுங்கல், அபீர் மேலாண்மை குழு மற்றும் ஹசன் கசாவி மருத்துவமனை நிர்வாகத்திற்கும் இந்த மதிப்புக்குரிய வாய்ப்பினை ஜெத்தா தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கி கவுரவித்தமைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.
ஹசன் கசாவி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஃபஹிம் அப்துல்ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொன்டு சமூக நலன் அட்டையை ஜெத்தா தமிழ்ச்சமூகத்திற்கு அறிமுகம் செய்து வைத்து இந்த சிறப்பு சலுகையுடன் கூடிய சமூக ஆரோக்கிய அட்டையினை ஜெத்தா தமிழ்ச் சமூகத்திற்கென பிரத்தோயகமாக வழங்கி கவுரவிப்பதாகும் என்று கூறி இந்த அட்டை, காப்பீடு பெற்ற மற்றும் காப்பீடு பெறாத அனைத்து நோயாளிகளுக்கும் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு , ஜெதாவில் உள்ள ஹஸன் கஜாவி மருத்துவமனை மற்றும் மக்காவில் உள்ள சவுதி தேசிய மருத்துவமனையிலும் பயன்படுத்தக்கூடியது என குறிப்பிட்டார்.
ஹஸன் கஜாவி மருத்துவமனையின் செயல்பாட்டு மேலாளர் ஷப்னம் இந்த ஆரோக்கிய அட்டையின் பல நலன்களை விரிவாக விளக்கினார்.
ஜெத்தா வில் செயல்படும் அனைத்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தமிழ் சமூக உறுப்பினர்களான பார்த்திபன், அப்துல் மஜீத், முகம்மது முனாப், நூருல் ஆமீன், முகம்மது ஷெரிப், இப்ராஹிம் மரைக்கையார், சங்கீதா மோகன், காக்கி ஹாஜா, செந்தில் ராஜா, ஆதம் அபுல் ஹஸன், அபுபக்கர், முகம்மது பசீர், சரண்யா தேவா, இந்துமதி சுரேஷ் ஆகியோர் தங்களது உரையின் போது ஜெத்தா தமிழ் சமூகத்தின் நலனுக்கான சிறந்த சலுகை அட்டையினை வழங்கிய , டாக்டர் ஹஸன் கஜாவி மருத்துவமனை மற்றும் அபீர் மேலாண்மை குழுவுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து பாராட்டினர் .
மருத்துவமனையின் மூத்த மார்கெட்டிங் அதிகாரி, பாஷா, அட்டை அனைத்து பெறுபவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தினார். இந்நிகழ்வில் மொத்தம் 150 சமூக ஆரோக்கிய அட்டைகள் வழங்கப்பட்டது இறுதியில் அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது
- நமது செய்தியாளர் பொறியாளர் காஜா மைதீன்
Advertisement