/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தாவில் ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர்கள் இஃப்தார் சந்திப்பு

மார் 15, 2026

ஜெத்தா : திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஜெத்தாவில் ஒன்றுகூடி, முன்னாள் வகுப்பு தோழர்களை மீண்டும் இணைக்கும் வகையில் ஒரு இஃப்தார் சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தனர். இந்த சந்திப்பு, நோன்பு திறப்பு மட்டும் அல்லாமல் கல்லூரி நாட்களின் இனிய நினைவுகளை மீண்டும் நினைவு கூறும் வாய்ப்பாகவும் அமைந்தது. முன்னாள் மாணவர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சந்தித்து நட்புறவுகள் புதுப்பித்ததுடன், ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் ஒன்றுபட்ட தன்மை போன்ற ரமலான் மாதத்தின் உணர்வுகளையும் கொண்டாடினர்.
மேலும், இந்த நிகழ்வு முன்னாள் மாணவர்களுக்கிடையே தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு உற்சாகமான தளமாகவும் அமைந்தது. இதில் கலந்து கொண்ட பலர் தங்கள் கல்லூரி வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களும் இனிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
கல்லூரி மேலாண்மை குழு உறுப்பினரும் முன்னாள் மாணவருமான ரஹமத்துல்லா கலந்து கொண்டவர்களை வரவேற்றார். தொடர்ந்து இஜாஸ் அகமது ஜெத்தா கிளையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். நிகழ்ச்சி இறுதியில் அப்துல் வஹாப் துஆ உடன், முன்னாள் மாணவர்கள் புதுப்பித்த நட்புறவுகள் இனிய நினைவுகள் மனதில் நிறைந்து மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர்
- ஜெத்தாவிலிருந்து நமது செய்தியாளர் M Siraj
Advertisement
Advertisement
Really very Happy Gathering old students of Jamal Mohamed college. I am Rabic Ahamed from Sankarankovil M.Sc Computer Science Batch1997-1999. Currently available in Dammam, Saudi Arabia. Please share JMC Old students whatsApp group here.
Rate this