/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தா இந்திய பன்னாட்டு பள்ளியின் புதிய முதல்வருடன் ஜெத்தா தமிழ்ச்சங்கம், ஜெத்தா தமிழ்ச் சமூக பெற்றோர்கள் சந்திப்பு

ஜூன் 15, 2024

ஜெத்தா தமிழ்ச்சங்கம் (JTS) மற்றும் ஜெத்தா தமிழ்ச் சமூக பெற்றோர்கள் சார்பாக ஜெத்தா இந்திய பன்னாட்டு பள்ளியின் புதிய முதல்வராக பொறுப்பேற்று கொண்ட முனைவர் மொஹமத் இம்ரானu வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் நடைபெற்ற கலந்துரையாடலில் பள்ளியில் படிக்கும் தமிழ் மாணவர்கள் மட்டுமின்றி இந்திய சமூக மாணவர்களின் நலன் கருதி கல்வி மேம்பாடு போட்டி தேர்வுகள், திறன் வளர்ப்பு, விளையாட்டு பயிற்சி, பள்ளியின் வசதிகள் பாடப்புத்தகம் சீறுடைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கையை பள்ளி நிர்வாக குழுவின் கவனத்திற்கு எடுத்து கூறப்பட்டது.
ஜெத்தா இந்திய பன்னாட்டு பள்ளியின் நிர்வாக குழு தலைவர் சேர்ந்த ஹேமா ராஜாவும், பள்ளியின் முதல்வர் இம்ரானும் தற்போது பள்ளியின் வளர்ச்சிக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் நவீன வசதிகள் குறித்தும் எடுத்து கூறினர். அனைத்து கோரிக்கைகளையும் பரிசிலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து
இந்த நிகழ்வு பயனுள்ளதாகவும் இதுபோன்ற கலந்துரையாடல்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் சிராஜ்
Advertisement