/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தா அபீர் மெடிக்கல் குழுமத் தலைவருக்கு சிறப்பிடம்
/
ஜெத்தா அபீர் மெடிக்கல் குழுமத் தலைவருக்கு சிறப்பிடம்
ஜெத்தா அபீர் மெடிக்கல் குழுமத் தலைவருக்கு சிறப்பிடம்
ஜெத்தா அபீர் மெடிக்கல் குழுமத் தலைவருக்கு சிறப்பிடம்
அக் 22, 2025

அபீர் மெடிக்கல் குழுமத்தின் தலைவர் அலுங்கல் முஹம்மது, மத்திய கிழக்கின் சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க தலைவராக ஃபோர்ப்ஸ் மிடில் ஈஸ்ட் Healthcare Leaders 2025 பட்டியலில் Founders & Shareholders (நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள்) பிரிவில் 45ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
இந்த பெருமை, மத்திய கிழக்கின் சுகாதாரத்துறை வேகமான முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் இக்காலத்தில், நீண்டகால நிறுவனர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்துகிறது.
1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அபீர் மெடிக்கல் குழுமத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் அதிபராக பணியாற்றி வரும் அலுங்கல் முகம்மது, குறிப்பாக சவூதி அரேபியாவை மையமாகக் கொண்டு, சுகாதாரத் துறையில் செய்த பங்களிப்புக்காக பாராட்டப்பட்டுள்ளார். கல்ப் நாடுகளில் (GCC) 50-க்கும் மேற்பட்ட மருத்துவ மையங்களை நடத்தி வரும் அபீர் மெடிக்கல் குழுமம் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.
Founders & Shareholders பட்டியலில் முன்னிலை வகிப்போர் — Pure Health நிறுவனத்தின் ஷைஸ்தா அசிஃப், Dr. Sulaiman Al Habib Medical Services Group (HMG) நிறுவனத்தின் டாக்டர் சுலைமான் அல் ஹபீப், மற்றும் Hikma Pharmaceuticals நிறுவனத்தின் சயீத் தர்வாஸா.
ஃபோர்ப்ஸ் மிடில் ஈஸ்ட் பட்டியல் வெளிவந்துள்ள இந்த நேரத்தில், மத்திய கிழக்கின் சுகாதாரத்துறை டிஜிட்டல் ஹெல்த் இணைப்பு, உள்ளூர் உற்பத்தி, நாடுகள் கடந்து ஒத்துழைப்பு, மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றின் விரைவான தழுவலுடன் பெரும் மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் மிடில் ஈஸ்ட் Healthcare Leaders பட்டியல், மத்திய கிழக்கின் சுகாதார அமைப்பின் எதிர்காலத்தை வழிநடத்தி வரும் 50 நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள், மேலும் 100 தலைமை நிர்வாகிகள் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்பை விரிவாக வெளிப்படுத்துகிறது.
- சவூதியிலிருந்து நமது செய்தியாளர் M Siraj
Advertisement