
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய்: துபாயில் பெல்டெக்ஸ் வர்த்தக குழுமத்தின் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருவிழாவையொட்டி இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் சங்கர், ராம்குமார், சந்தோஷ், அம்பலவாணன் உள்ளிட்ட குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டனர். தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதனையடுத்து பர்துபாய் பகுதியில் விடப்பட்ட பட்டாசு விடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஜஹாங்கீர், செய்யது இப்ராஹிம், முஹம்மது பிச்சை, ஹபிப் திவான் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.
- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement