/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா
/
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா
டிச 01, 2025

குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா..!
குவைத் : குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டி வளாகத்தில் கடந்த 21-11-2025 வெள்ளிக்கிழமை குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் டாக்டர் அப்துல் கலாம் பிறந்ததினம் மற்றும் குழந்தைகள் தின சிறப்பு மற்றும் அயலக தமிழர் நலம் காக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தல், மனித நேய சான்றோருக்கு சிறப்பு செய்தல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் இந்தியர்களுக்கு முக்கியமாக தமிழர்களுக்கு பல்வேறு சட்ட பிரச்சினைகள் மற்றும் விபத்து வழக்குகள் ஆகியவற்றில் பாதிப்படையும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கான தீர்வுகள் குறித்து இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், லெக்ஸ்லாய்ஸ் சட்ட நிறுவனத்தின் தலைவருமான சமியுல்லா சிறப்புரை ஆற்றினார்.
மேலும் குவைத் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் வழக்குகளை துரிதமாக நடத்திடவும் மேலும் அவர்களுக்கான இழப்பீட்டை பெற்று தரவும் குவைத் நாட்டின் வழக்கறிஞர்களிடம் கோரிக்கையும் வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முனைவர் ஹாஜி எஸ்.எம் ஹைதர் அலி அவர்கள் எம் ஏ ஹைதர் குரூப் சேர்மேன், ஆலிம் பெருந்தகை டாக்டர் மௌலானா சதீதுத்தீன் பாகவி முதல்வர், ஜாமிஆ அல் ஹிதாயா அரபிக்கல்லூரி அடையாறு -சென்னை, சமூக ஆர்வலர் மும்தாஜ், சென்னை, லெக்ஸ்லாய்ஸ் சட்ட உதவி நிறுவனத்தின் மேலாளர் அப்துல் சாஹித், மவ்லவி ஹாபிஸ் கே.எஸ் கலீலுர் ரஹ்மான் உஸ்மானி பாஜில் ரஷாதி,
காஞ்சிபுரம் & செங்கல் பட்டு மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை, பொருளாளர் மவ்லவி ஹாபிஸ் கே.எஸ் கலீலுர் ரஹ்மான் உஸ்மானி பாஜில் ரஷாதி,
புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் சிறுபான்மை துறையின் ஏ. முகம்மது ஹசன், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை புதுப்பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி ஹாஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி குவைத் விமான நிலைய அதிகாரி மெக்லெத் லெபி ஸ்னிகத் அல் முதைரி, அமர் தொசரி, தீயணைப்புத்துறை அதிகாரி பதெர் அல் ஐபானி, குவைத் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள கலந்துக்கொண்டனர். --- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement

