/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தா தமிழ் கலாச்சார மையம் நடத்திய மக்கள் சங்கமம்
/
ஜெத்தா தமிழ் கலாச்சார மையம் நடத்திய மக்கள் சங்கமம்
ஜெத்தா தமிழ் கலாச்சார மையம் நடத்திய மக்கள் சங்கமம்
ஜெத்தா தமிழ் கலாச்சார மையம் நடத்திய மக்கள் சங்கமம்
அக் 08, 2025

ஜெத்தா தமிழ் கலாச்சார மையம் நடத்திய மக்கள் சங்கமம்
சவுதி அரேபியா, ஜெத்தா நகரில் ஜெத்தா தமிழ் கலாச்சார மையம் நடத்திய பிரம்மாண்டமான அயலகத் தமிழர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி - மக்கள் சங்கமம் என்ற தலைப்பில் அக்டோபர் 3 ஆம் தேதி கரம் அல் பலத், நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 600க்கும் மேற்பட்ட அயலக தமிழ் சொந்தங்கள், தமிழ் அமைப்புகளான, இந்தியன் வெல்பேர் போரம், ஜித்தா தமிழ் சங்கம் மெப்கோ, ஜித்தா தமிழ் மன்றம், செந்தமிழ் நல மன்றம் ஆகிய அமைப்பின் நிர்வாகிகள், மருத்துவர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் இருநாட்டு தேசிய கீதங்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் ஜெத்தா தமிழ் கலாச்சார மையத்தின் தலைவர் இஸ்மாயில் ஷரீப் தலைமை தாங்கி அயலகத்தில் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் அயலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாகவும் ஜெத்தா தமிழ் கலாச்சார மையம் விளங்கும் என்றார்.
துணைத் தலைவர் ஜமீல்தீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், செயலாளர் அப்துல் சமது முன்னிலை வகிக்க, பொருளாளர் அல் அமீன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரையாற்றினார்.
ஜெத்தா தமிழ் கலாச்சார மையம் நடத்திய உங்கள் திறமை உங்கள் வெற்றி என்ற தலைப்பிலான அயலக மாணவ மாணவியர்களுக்கான அறிவு சார் போட்டிகள் மற்றும் இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டிகளின் வெற்றியாளர்களுக்கான பரிசுகளையும், பதக்கங்களையும், கோப்பைகளையும் ஆளுர் ஷாநவாஸ் வழங்கினார்.
கடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உளவியல் ஆலோசகர் பானு ஹமீது குடும்ப நலனில் உளவியலின் பங்கு என்ற தலைப்பில் பேசினார்.
ஜெத்தா தமிழ் கலாச்சார மையம், Universal Inspection Company, MD & CEO. பத்ருத்தீன் அப்துல் மஜீத்துக்கு, அவரின் செயல்களை பாராட்டி செம்மொழி நாயகன் என்ற விருதினை வழங்கி கௌரவபடுத்தியது.
மேலும் சவுதி அரேபியாவில் தொழில் செய்து வரும் தொழிலதிபர்களுக்கான விருதும், சாதனையாளர்களுக்கான விருதும், நல்லாசிரியர் விருதும் இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் வழங்கி சிறப்பித்தார்.
மக்கள் நலப்பணி பிரிவின் செயலாளர் முகமது அப்பாஸ் ஜெத்தா தமிழ் கலாச்சார மையத்தின் நோக்கம் மற்றும் பொது சேவைகளை பற்றி பேசினார்.
செயற்குழு உறுப்பினரான அகமது இப்ராஹிம், ஹுசைன் தன்னார்வலர் குழுவினர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இளைஞர் மற்றும் விளையாட்டு பிரிவின் செயலாளர் சித்திக் அஹமது லெப்பை நன்றி கூறினார்.
Advertisement