/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் இந்திய கல்விக் கண்காட்சி
/
துபாயில் இந்திய கல்விக் கண்காட்சி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய்: துபாயில் இந்திய கல்விக் கண்காட்சி நடந்தது. இந்த கல்விக் கண்காட்சியை இந்திய துணைத் தூதர் சதீஷ்குமார் சிவன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ள16க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் அரங்குகளை பார்வையிட்டார்.
அப்போது அந்த அரங்குகளின் அதிகாரிகள் அங்கு நடத்தப்பட்டு வரும் படிப்புகள் குறித்த விபரங்களை தெரிவித்தனர். இந்திய துணைத் தூதரக அதிகாரி பி.ஜி. கிருஷ்ணன் உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர்.
- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement