/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜூபைல் தமிழ்ச்சங்கம் சார்பாக பொங்கல் விழா
/
ஜூபைல் தமிழ்ச்சங்கம் சார்பாக பொங்கல் விழா
பிப் 06, 2025

சவுதி அரேபியா ஜூபைல் நகரில் ஜூபைல் தமிழ்ச்சங்கம் சார்பாக பொங்கல் விழா சங்கமம் பெரும் திரளான தமிழ் மக்கள் பங்கேற்புடன் வெகு சிறப்பாக கொண்டாப்பட்டது
முற்றிலும் தமிழ் கலாச்சார பண்பாட்டினை போற்றியும், அடுத்த தலைமுறையினருக்கும் தோற்றுவிற்கும் விதமாக தமிழ் கலாச்சார விழாவாக அமைந்தது. இவ்விழா காலையிலே பொங்கலிட்டு தொடங்கப்பட்டு நாள் முழுவதும் தமிழ் கிராமிய பாடலுடன் கூடிய நடனங்கள், தமிழரின் தற்காப்பு விளையாட்டான சிலம்பம், உறியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட சிறுவர் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் என கோலோகலமாக நடைபெற்றன.
பாரம்பரிய முறைப்படி தலைவாழை இலையிட்டு உணவு பரிமாறப்பட்டது. இதனை தொடர்ந்து குத்து விளக்கேற்றி தொடங்கப்பட்ட கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் விருந்தினரை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் பல்வேறு சமூக அமைப்பின் பிரதிநிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியினை ஜூபைல் தமிழ்ச்சங்க தலைவர் பிரேம், பிரம்மராயன், பிரசாத், சிக்கந்தர் பாஷா, கார்த்திக், சரவணன் ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வெகு சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தனர்
- நமது செய்தியாளர் பொறியாளர் காஜா மைதீன்
Advertisement