sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

சத்குருவின் முன்னெடுப்புகளுக்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் பாராட்டு

/

சத்குருவின் முன்னெடுப்புகளுக்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் பாராட்டு

சத்குருவின் முன்னெடுப்புகளுக்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் பாராட்டு

சத்குருவின் முன்னெடுப்புகளுக்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் பாராட்டு


பிப் 07, 2025

Google News

பிப் 07, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“சத்குருவின் முன்னெடுப்புகள் அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை மேம்படுத்தும் உலகிற்கான முன்மாதிரி” என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சகிப்புத்தன்மை மற்றும் இணைந்து வாழ்தல் துறையின் அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள சத்குரு, அந்நாட்டின் அமைச்சர் ஷேக் நஹ்யானை, அபுதாபியில் சந்தித்தார். சத்குருவிற்கு அமைச்சர் ஷேக் நஹ்யான் சிறப்பான வரவேற்பினை அளித்து அவருடன் கலந்துரையாடினார்.


இச்சந்திப்பின் போது ஷேக் நஹ்யான், உலகளவில் ஆன்மீக விழிப்புணர்வை மேம்படுத்துவதிலும், உன்னதமான மனித மாண்புகளை வளர்ப்பதிலும் சத்குரு தலைமையேற்று செயல்படுவதாக பாராட்டினார். மேலும் அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை மேம்படுத்துவதிலும், கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடலை வளர்ப்பதற்கும், நாடுகளிடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதற்கும் சத்குருவின் முன்னெடுப்புகள் உலகிற்கான முன் மாதிரியாக செயல்படுகின்றன என்று குறிப்பிட்டார்.


இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள சத்குரு “ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பண்பை தன் இயல்பாகக் கொண்ட ஷேக் நஹ்யானை மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சி. அவர் தனது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் போற்றிக் காக்கும் அதே சமயம், அனைவரையும் அவர்களது கலாச்சாரம், நம்பிக்கை அல்லது அடையாளம் எதுவாக இருந்தாலும் வரவேற்கும் இயல்புடையவர். ஒரு நாட்டை ஆள்வதற்கான உண்மையிலேயே விவேகமான வழி இது. உலகளாவிய பொருளாதார மையமாக இருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இப்போது உலகளவில் அனைவரையும் அரவணைக்கும் ஒரு மையமாகவும் உருவெடுத்து வருகிறது.” எனக் கூறியுள்ளார்.


https://x.com/SadhguruTamil/status/1886104527000244408

முன்னதாக துபாயின் கலாச்சாரம் மற்றும் சுற்றலாத் துறையின் சார்பில் அபுதாபியில் நடைபெற்ற “கயான் வெல்னஸ் விழாவில்” சத்குரு சிறப்பு அழைப்பின் பேரில் பங்கேற்றார் அவ்விழாவில் அவர் “மனதின் அதிசயம் - உங்கள் விதியை உருவாக்குங்கள்” என்ற தலைப்பில் முக்கிய உரையை நிகழ்த்தினார். இந்த சிறப்புரையின் போது, மனித மனதின் பல்வேறு அம்சங்களையும் சாத்தியக்கூறுகளையும் அவர் விளக்கியதோடு, நம் உள்ளார்ந்த மேதைமையைத் திறப்பதற்கு 'மனதின் அதிசயத்தை' எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது பற்றிய நுண்ணறிவுகளையும் பகிர்ந்துகொண்டார்.


https://x.com/SadhguruTamil/status/1886016273274016096


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us