/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
சவூதி தம்மாமில் பொன்மாலைப் பொழுது இசைத் திருவிழா
/
சவூதி தம்மாமில் பொன்மாலைப் பொழுது இசைத் திருவிழா
ஜூலை 01, 2025

சவுதியில் வசிக்கும் தமிழ்நாடு ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பாக பொன்மாலைப் பொழுது என்னும் இசை கச்சேரி திருவிழா நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை அன்று சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான தம்மாம் நகரில் நடைபெற்றது இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் வசிக்கக்கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்
தொழிலதிபர் பத்ருதீன் அப்துல் மஜீத் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்நாடு ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் முருகலிங்கம் தலைமை உரை நிகழ்த்தினார். பத்ருதீன் அப்துல் மஜீத் சிறப்புரை சிறப்புரை ஆற்றினார். அவருக்கு Excellence of Intellectual Business Genius Award தமிழ்நாடு ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது நிகழ்ச்சியை சவுதி தமிழ் கலாச்சாரம் மையத்தின் நிறுவனத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் கிழக்கு மண்டல தலைவர் சரவணன் பெரியசாமி கிழக்கு மண்டல துணைத் தலைவர் ஜமால் கிழக்கு மண்டல செயலாளர் பூவரசன் கலை கலாச்சாரப் பிரிவு செயலாளர் நெல்சன் செல்வநாயகம் ஆகியோர் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்தனர்
வெளிநாடு வாழ் தமிழ் இந்தியன் சங்கத்தின் கிழக்கு மண்டல அமைப்பாளர் சிக்கந்தர் பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்வில் பல்வேறு தமிழ் இசை கலைஞர்கள், பாடகர்கள், நடன கலைஞர்கள் குழந்தை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு தமிழ் கலை கலாச்சார பண்பாட்டை உணர்த்தும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்தனர்
நிகழ்ச்சியை யாசர், சஹானா சிறப்பான முறையில் தொகுத்து வழங்கினர்.
- தினமலர் வாசகர் ரஹ்மத்துல்லாஹ்
Advertisement