/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
உதிரம் கொடுப்போம்!! உயிர் காப்போம்!!
/
உதிரம் கொடுப்போம்!! உயிர் காப்போம்!!

கத்தர் தமிழர் சங்கம், 'உதிரம் கொடுப்போம்!! உயிர் காப்போம்!!' என்ற உன்னத நோக்கத்துடன், ஹமாத் மருத்துவமனையில் உள்ள இரத்த நன்கொடையாளர் மையத்தில் மாபெரும் இரத்த தான முகாமை நடத்தியது. இதில் 160 கொடையாளர்கள் ஆர்வமுடன் உதிரம் கொடுத்து மனிதநேயத்தைப் போற்றினர்.
கத்தர் தமிழர் சங்கத் தலைவர் முனியப்பன், இரத்த தானம் செய்த கொடையாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பித்தார். முகாம் வெற்றிபெற அயராது உழைத்த மனிதநேயநலச் செயலாளர் ப்ரம்மா, மனித நேய சேவை குழு, தன்னார்வலர்கள்மற்றும் மாணவர்களைப் பாராட்டினார். இம்முகாமின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனிதநேய நலச் செயலாளர் பிரம்மகுமார் நன்றியைத் தெரிவித்தார்.வாகன வசதி கோரிய கொடையாளர்களுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
25 முறை இரத்த தானம் செய்து தன்னலமற்ற சேவையாற்றிய முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் ராமசெல்வத்தின் சேவையை பாராட்டி அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. உரிய நேரத்தில் முதலுதவி செய்து உயிர்காத்த உறுப்பினர் பிரபுவின் சேவையை பாராட்டி அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இந்திய கலாச்சார மையத்தின் துணைத்தலைவர் சாந்தனு, மேலாண்மைக் குழு உறுப்பினர் ரவீந்திரபிரசாத் மற்றும் ஏனையஅமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பல்வேறு தரப்பட்ட மக்களும் மனித நேயத்துடன் குருதி வழங்கி மானுடம் போற்றினர்.
- தினமலர் வாசகர் வி.நாராயணன், பொதுச் செயலாளர், கத்தார் தமிழச் சங்கம்
Advertisement