/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத் தமிழ்நாடு பொறியாளர் குழுமம் (TEF), நடத்திய பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி

நவ 11, 2025

குவைத் தமிழ்நாடு பொறியாளர் குழுமம் (TEF), நடத்திய பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி
குவைத், நவம்பர் 7: தமிழ்நாடு பொறியாளர் குழுமம் (TEF), குவைத் “இன்னோஎக்ஸ் (InnoEx-2025) - எனும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நிகழ்ச்சியை சல்வா பகுதியில் உள்ள அல்-ஜுமெரியா அரங்கில் வெற்றிகரமாக நடத்தினர்.
பள்ளி மாணவர்கள் தங்கள் புதுமை, சிந்தனைத் திறன் மற்றும் தொழில்நுட்ப ஆற்றலை வெளிப்படுத்திய இந்நிகழ்ச்சி, மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதில் தமிழ்நாடு பொறியாளர் குழுமம் அமைப்பின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டியது. இவ்விழாவில், குவைத் முழுவதும் உள்ள 20 இந்திய பள்ளிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (ISRO) ஆதித்யா L1 திட்ட இயக்குநராக பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியின் சூரிய மங்கை நிகார் ஷாஜி தலைமை விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்தார். காலை 7.30 மணிக்கு நிகார் ஷாஜி தலைமையில் ரிப்பன் வெட்டும் விழாவுடன் நிகழ்ச்சி துவங்கியது. அவருடன் TEF தலைவர் ராஜா, பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் IIK இயக்குநர் சுனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். TEF இணைச் செயலாளர் பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்தி, பங்கேற்ற மாணவர்கள், பள்ளிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். தலைமை விருந்தினர் நிகார் ஷாஜி தனது உரையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும், மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் தேவையையும் வலியுறுத்தினார். வேலை செய்யும் மாதிரிகள் (Working projects), ரூபிக்ஸ் சவால், போஸ்டர் தயாரிப்பு, வினாடி வினா, ரோபோடிக் கால்பந்து மற்றும் சுடோக்கு போன்ற பல அறிவார்ந்த போட்டிகள் நடைபெற்றன. பரிசளிப்பு விழாவில், பங்கேற்ற மாணவர்களின் சாதனைகள் பாராட்டப்பட்டன. “இன்னோஎக்ஸ்” சுழற் கோப்பை மொத்த சாம்பியன்” பட்டத்தை வென்ற FAIPS-DPS , கபில் நன்றி கூறினார். - குவைத்தில் இருந்து சுப்பு
Advertisement