/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் உள்ள வாய்ப்புகள் குறித்து துபாயில் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் 'ஜமால் முகமது' நூல் வெளியீடு
/
சிங்கப்பூரில் உள்ள வாய்ப்புகள் குறித்து துபாயில் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் 'ஜமால் முகமது' நூல் வெளியீடு
சிங்கப்பூரில் உள்ள வாய்ப்புகள் குறித்து துபாயில் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் 'ஜமால் முகமது' நூல் வெளியீடு
சிங்கப்பூரில் உள்ள வாய்ப்புகள் குறித்து துபாயில் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் 'ஜமால் முகமது' நூல் வெளியீடு
மே 20, 2024

துபாய் : துபாய் நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் சிங்கப்பூர் பிரிவு தலைவர் முனைவர் முஹைதீன் அப்துல் காதருக்கு வரவேற்பு மற்றும் கல்லூரியின் நிறுவனர் 'ஜமால் முகமது' என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா நடந்தது.
விழாவுக்கு முன்னாள் மாணவர் சங்க தலைவர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் சிங்கப்பூர் பிரிவு தலைவரின் பணிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கல்லூரியின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்கை வகித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு துபாயில் வரவேற்பு அளிப்பதில் மிகவும் பெருமைப்படுகிறோம் என்றார்.
முன்னதாக இலங்கை பொத்துவில் மௌலவி சுபையில் அஹில் முஹம்மது இறை வசனங்களை ஓதினார். ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிங்கப்பூர் பிரிவு தலைவர் முனைவர் முஹைதீன் அப்துல் காதர் சிங்கப்பூரில் உள்ள் வாய்ப்புகள் குறித்து உரை நிகழ்த்தினார். முறையான தகுதியுடன், பல்வேறு திறமைகளுடன் வருபவர்களுக்கு சிங்கப்பூரில் சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. வேலைக்கு மட்டுமல்லாமல் வர்த்தகம் செய்வதற்கும் சிறந்த நாடு சிங்கப்பூர். கல்லூரி குறித்து சிங்கப்பூர் அதிபர், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் கல்லூரியின் சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் முன்னாள் மாணவர் சங்கம் செயல்பட்டு வருகிறது என்றார். மேலும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடந்தது.
ஜெ.பி.பி. மோரே ஆங்கிலத்தில் எழுதி முனைவர் ச.அ. சையத் அகமது பிரோசு தமிழில் மொழிபெயர்த்த 'ஜமால் முகமது' என்ற நூலை முனைவர் முஹைதீன் அப்துல் காதர் வெளியிட முதல் பிரதியை இஸ்லாம் டைரியின் ஆசிரியர் காஜா முகைதீன் பெற்றுக் கொண்டார்.
கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் பீ.மு.மன்சூர், லேண்ட்மார்க் ஹோட்டலின் மேலாண்மை இயக்குநர் சாதிக் காக்கா, கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன், திருச்சி பைசுர் ரஹ்மான், திருவிடச்சேரி எஸ்.எம். ஃபாரூக், ரஹ்மத்துல்லா, முஹம்மது அனஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிர்வாகச் செயலாளர் மன்னர் மன்னன் நன்றியுரை நிகழ்த்தினார். பின்னர் குழு புகைப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement