sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

அமீரக பல்கலைக்கழகத்தில் முதுகலையில் தமிழக மாணவி முதலிடம்

/

அமீரக பல்கலைக்கழகத்தில் முதுகலையில் தமிழக மாணவி முதலிடம்

அமீரக பல்கலைக்கழகத்தில் முதுகலையில் தமிழக மாணவி முதலிடம்

அமீரக பல்கலைக்கழகத்தில் முதுகலையில் தமிழக மாணவி முதலிடம்


மே 21, 2024

Google News

மே 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அல் அய்ன் : ரிஃபா பாத்திமா ஐக்கிய அரபு அமீரகம் அல் அய்ன் நகரில் இயங்கிவரும் ஐக்கிய அரபு அமீரக பல்கலைக்கழக்தில் மருத்துவ உளவியல் மற்றும் ஆராய்ச்சி முதுகலை பட்டப்படிப்பை படித்துவந்தார் இந்நிலையில் சென்ற மாதம் வெளியான தேர்வுமுடிவில் மேற்கண்ட ஆராய்ச்சி படிப்பில் அமீரகத்தின் முதல் மாணவியாக தேர்ச்சிபெற்று அதற்கான சிறப்பு சான்றிதழைகடந்த மாதம் ஏப்ரல் 24 அன்று பல்கலைக்கழகத்தின் விழாவில் வழங்கி சிறப்பித்ததை அடுத்து, 15 -05-2024 புதன் அன்று முதலிடம் வந்த மாணவி ரிஃபா வை துணைவேந்தர் காலிப் அலி அல்ஹத்தாமி பாராட்டி கௌரவப்படுத்தினார்.

அதனைத்தொடர்ந்து,கல்லூரியின் டீன் அலி அல்மர்ஸூக்கி, பாடத்திட்ட பேராசிரியர் டாக்டர் சல்மா மற்றும் அனைத்துப்பேராசிரியர்கள் பாராட்டுதல்களையும் பெற்றார்


இந்த ஆராய்ச்சி படிப்பில் மனித மூளையின் வேறுபாடுகளை பகுப்பாய்தல், கோளாறுகள், தன்மைகள் போன்றவற்றை கண்டறிதல் மற்றும் சரி செய்தல் மேலும் செயற்கை நுண்ணறிவு அறிவியல் (artificaial Inteligence science) மூலமாக உளவியல் பிரச்சனைகளுக்கு எளிதான தீர்வுகாணுதல் ஆகியவை அடங்கும்.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த இவர் இதேபோல் இளங்கலை படிப்பிலும் அமீரகத்தில் முதல் மாணவியாக வந்தவர் அதற்காக அமீரக அரசு இவருக்கு பத்தாண்டிற்கான கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளதும் இவரது இருசகோதரிகளும் படிப்பில் முதலிடம் பெற்று அரசின் கோல்டன் விசா பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை செய்யது அபுதாஹிர் துபாய் நகரில் சொந்தமாக நிறுவனங்களை நிர்வகித்து வருவதோடு சமூக சேவைகளையும் செய்துவருகிறார்


முதன்மை மாணவியாக வந்த ரிஃபா கூறும்போது, 'இது மிகுந்த மகிழ்ச்சியான தருணம் எனது படிப்பு, திறமை முதலியவற்றை உலக பெண்களின் முன்னேற்றத்திற்காக குறிப்பாக பெண் குழந்தைகள் அவர்களுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை கண்டறிந்து அதிலிருந்து வெளியேறுவதற்கும், மாணவிகள் மனதளவில் ஊக்கம்பெற்று கல்வி, பொருளாதாரம், சமூகமேம்பாடு போன்றவற்றில் அக்கறை செலுத்துவதற்கும் என் அறிவை முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்துவேன். கல்வியால் நான்பெற்ற பலனை மானுடம் பயன்பெற செய்வதே என் இலக்கு என்கிறார்.


மேலும் பல ஆராய்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள போவதாகவும் ,மேற்கண்ட பல்கலைக்கழகம் அதற்காக தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் எல்லாவகையிலும் அளித்துவருகிறார்கள் என்று கூறிய அவர் இறுதியாக எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்று நிறைவுசெய்தார்.


ரிஃபா பாத்திமா நம் மண்ணிற்கும் பெண்கல்வி முன்னேற்றத்திற்கும் பெருமை சேர்த்தவர் என்பதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்வோம்.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us