/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஷார்ஜா நூலகத்தில் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
/
ஷார்ஜா நூலகத்தில் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
ஷார்ஜா நூலகத்தில் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
ஷார்ஜா நூலகத்தில் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
டிச 29, 2025

ஷார்ஜா: ஷார்ஜா சர்வதேச விமான நிலைய சாலையில் ஹவுஸ் ஆஃப் விஸ்டம் என்ற பிரமாண்ட நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் அரபி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூல்கள் உள்ளது.
இந்த நூலகத்தில் குளிர்காலத்தையொட்டி பள்ளிக்கூட விடுமுறையையொட்டி மாணவ, மாணவியரின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் 5 வயது முதல் 12 வயதுடைய 328 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களது ஓவியம் உள்ளிட்ட பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
சிறப்பான வகையில் திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
- ஷார்ஜாவிலிருந்து நமது வாசகர் அம்ஜத் கான்
Advertisement