/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு

டிச 28, 2025

குவைத்: குவைத் இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. இந்தியாவைச் சேர்ந்த தன்முனைப்பு பயிற்சியாளர் அதீகுர் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பெற்றோர்கள் தற்ப்பொதுள்ள டிஜிட்டல் யுகத்தில் பிள்ளைகளை கண்காணிக்கும் வழிமுறைகள் தொடர்பான வழிமுறைகள் குறித்து விவரித்தார். மேலும் பிள்ளைகள் தங்களது திறமைகளை மேற்கொள்ள வேண்டியது தொடர்பாகவும் விவரித்தார்.
இதில் பெற்றோர்களும், மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர்.
- குவைத்திலிருந்து நமது வாசகர் ஹமீத்
Advertisement