/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட்டில் இந்தியா - ஓமன் வரலாறு குறித்த சிறப்பு நிகழ்ச்சி
/
மஸ்கட்டில் இந்தியா - ஓமன் வரலாறு குறித்த சிறப்பு நிகழ்ச்சி
மஸ்கட்டில் இந்தியா - ஓமன் வரலாறு குறித்த சிறப்பு நிகழ்ச்சி
மஸ்கட்டில் இந்தியா - ஓமன் வரலாறு குறித்த சிறப்பு நிகழ்ச்சி
ஏப் 01, 2024

மஸ்கட் : ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் மாண்ட்வியில் இருந்து மஸ்கட்டிற்கு என்ற தலைப்பில் ஓமன் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்றை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் தலைமை வகித்தார்.
வரலாற்று நிபுணர் ஸ்வாகத் பனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் ஓமன் மற்றும் வளைகுடா நாடுகளில் இந்திய ரூபாயின் பயன்பாடு பழங்காலத்தில் இருந்ததை விளக்கும் வரலாற்று தகவல்களை நினைவு கூர்ந்தார். இதேபோல் ஓமன் வர்த்தகர்கள் உள்ளிட்டோரும் இந்திய ரூபாயின் பயன்பாடு குறித்து விவரித்தனர்.
இந்த விழாவில் இந்திய மற்றும் ஓமன் சமூகத்தினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே நெருங்கிய பிணைப்பு இருந்து வந்தது குறித்து பெருமிதம் தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement