/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி
/
துபாயில் பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி
மே 17, 2024

துபாய் : துபாய் ஜெம்ஸ் மாடர்ன் அகாடமியில் ஐ.சி.எஸ்.இ. இந்திய பாடத்திட்டத்தில் பிளஸ் டூ படித்த தமிழக மாணவி ரிதா மரியம் 95.25 சதவீத மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றார்.
மேலும் இவர் சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்தில் 99 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கூடத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளார். இந்த மாணவி ஓவியம் வரைவது உள்ளிட்ட பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார்.
இவர் ஆங்கிலத்தில் 92, உளவியலில் 97, வேதியியல் 93, உயிரியலில் 87, சுற்றுச்சூழல் அறிவியலில் 99 மதிப்பெண்களை பெற்றார். இவரது தந்தை சொறிப்பாரைப்பட்டி ஜாஹிர் உசேன் அரசு நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பள்ளிக்கூட முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement