/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் சிங்கப்பூர் முன்னாள் மாணவர் சங்க பிரமுகருக்கு வரவேற்பு
/
துபாயில் சிங்கப்பூர் முன்னாள் மாணவர் சங்க பிரமுகருக்கு வரவேற்பு
துபாயில் சிங்கப்பூர் முன்னாள் மாணவர் சங்க பிரமுகருக்கு வரவேற்பு
துபாயில் சிங்கப்பூர் முன்னாள் மாணவர் சங்க பிரமுகருக்கு வரவேற்பு
மே 17, 2024

துபாய் : துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் அமீரக சுற்றுப்பயணமாக வருகை புரிந்துள்ள சிங்கப்பூர் கிளை தலைவர் டாக்டர் முஹைதீன் அப்துல் காதருக்கு விமான நிலையத்தில் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருடன் அவரது மருமகனும், சிங்கப்பூர் பாராளுமன்றத்தின் முன்னாள் நியமன உறுப்பினர் முஹம்மது இர்ஷாத்தும் வந்தார். அவருக்கும் பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், நிர்வாகச் செயலாளர் தஞ்சை மன்னர் மன்னர், சமூக ஆர்வலர் திருச்சி பைசுர் ரஹ்மான், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement