/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஓமன் நாட்டின் இப்ரி பகுதியில் இந்திய தூதர் சுற்றுப்பயணம்
/
ஓமன் நாட்டின் இப்ரி பகுதியில் இந்திய தூதர் சுற்றுப்பயணம்
ஓமன் நாட்டின் இப்ரி பகுதியில் இந்திய தூதர் சுற்றுப்பயணம்
ஓமன் நாட்டின் இப்ரி பகுதியில் இந்திய தூதர் சுற்றுப்பயணம்
மே 15, 2024

மஸ்கட் : ஓமன் நாட்டின் இப்ரி பகுதியில் இந்திய தூதர் அமித் நாரங் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இப்ரி பகுதிக்கு சென்ற இந்திய தூதர் அங்குள்ள இந்திய பள்ளிக்கூடத்தில் உள்ள பல்வேறு வசதிகளையும் பார்வையிட்டார். பின்னர் அங்கு இந்திய தூதருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாணவ, மாணவிகள் மத்தியில் பேசிய இந்திய தூதர், படிக்கும் காலத்தில் வாசிப்பு பழக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். கல்விக்காக மட்டுமல்லாம, சுய முன்னேற்றத்துக்காகவும் இந்த பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடந்தது. இந்திய தூதருக்கு பள்ளிக்கூட நிர்வாகத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மேலும் இப்ரி பகுதியில் வசித்து வரும் இந்திய சமூகத்தினருடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய தூதர் இந்திய - ஓமன் உறவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் இந்திய சமூகத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது இந்திய சமூகத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அந்த கோரிக்கைகளை கேட்ட இந்திய தூதர் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement