/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பஹ்ரைன் இந்திய தூதரகத்தை பார்வையிட்ட மாணவர்கள்
/
பஹ்ரைன் இந்திய தூதரகத்தை பார்வையிட்ட மாணவர்கள்
அக் 19, 2025

பஹ்ரைன்: பஹ்ரைன் இந்திய தூதரகத்தை பார்வையிடும் திட்டத்தின் அடிப்படையில் ஜல்லாக் பள்ளிக்கூட மாணவர்கள் தூதரகத்துக்கு வந்தனர். அவர்களை தூதரக அதிகாரிகள் மிகவும் உற்சாகமாக வரவேற்றனர். அதனையடுத்து தூதரகத்தின் பல்வேறு பகுதிகளையும், அங்கு செய்யப்படும் பணிகள் குறித்தும் விவரித்தனர். குறிப்பாக இந்தியாவின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவை குறித்து தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப்பை சந்தித்து பேசினர். அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். மாணவர்களில் இந்தியா மட்டுமல்லாது அரபு நாட்டைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். இந்த அனுபவம் தங்களுக்கு இந்தியா குறித்த பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள உதவியாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement