/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அஜ்மானில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு
/
அஜ்மானில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு

அஜ்மான்: அஜ்மான் அன்வர் பிசினஸ்மென் சர்வீஸ் நிறுவனத்தில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சென்னை பிரிவு நிர்வாகி அல்ஹாஜ் எஸ்.எம். இதாயத்துல்லாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு அன்வர் பிசினஸ்மென் சர்வீஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீன் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் அல்ஹாஜ் எஸ்.எம். இதயாத்துல்லாவின் சமூகப் பணிகள் குறித்து நினைவு கூர்ந்தார்.
மேலும் வசதியற்ற மாணவ, மாணவியர் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் கல்வி உதவித்தொகை வழங்குவது, வட்டியில்லா கடன் வழங்கும் வகையில் பைத்துல்மால் உள்ளிட்ட அமைப்புகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட எண்ணற்ற பணிகளை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.
அதனையடுத்து அவர் தான் எழுதிய 'வெற்றி என்னும் மாயக்குதிரை' என்ற முதலாவது தன்னம்பிக்கை நூலை வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், ஃபக்ருதீன் அலி அஹமது, அஹமது இம்தாதுல்லா, செயற்கை நுண்ணறிவு பொறியாளர் அல்ஹாப் மாலிக், செய்யது அப்துல் காதர் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement

