sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்

/

ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்

ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்

ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்

1


மார் 07, 2026

Google News

மார் 07, 2026

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்னி : ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகையை தமிழகத்தின் கீழக்கரையைச் சேர்ந்த மாணவர் முஹம்மது உவைஸ் அஹமது (வயது 15 ) நடத்தி வருகிறார்.


கீழக்கரையைச் சேர்ந்த தம்பதி அஹமது அப்துல் காதர் மற்றும் சுமையா அஹமது. இவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னியின் ஆர்பன் பகுதியில் வசித்து வருகின்றனர்.


இவர்களது மகன் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். அவரது தந்தையின் விருப்பப்படி பார்க் ரோடு முசல்லாவில் உள்ள மதரஸாவில் திருக்குர்ஆன் முழுவதையும் தஜ்வீத் முறைப்படி மனப்பாடம் செய்துள்ளார்.


தற்போது அங்குள்ள பள்ளிவாசல் தலைமை இமாம் கீழக்கரை மாணவரின் சிறப்பான குரல் வளத்தையடுத்து அவருக்கு தராவீஹ் தொழுகை செய்ய வாய்ப்பு வழங்கியுள்ளார்.


அந்த மாணவரும் மிகவும் அழகிய குரலில் தொழுகை நடத்தி வருகிறார். அவரை பின் தொடர்ந்து ஆண்களும், பெண்களும் தனித்தனியே தொழுது வருகின்றனர். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.


அந்த மாணவரின் குரல் இதயங்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.


கீழக்கரை மாணவருக்கு ஆஸ்திரேலியாவில் இத்தகைய கௌரவம் கிடைத்திருப்பது தமிழகத்துக்கு கிடைத்துள்ள பெருமையாகும்.


இது குறித்து துபாயில் வசித்து வரும் அவரது தாத்தா முஹம்மது இஸ்மாயில், தனது பேரன் ஆஸ்திரேலியாவில் திருக்குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்து தராவீத் தொழுகை நடத்தி வருவது மிகவும் பெருமையளிக்கிறது என தெரிவித்தார்.



Advertisement

Advertisement


fitz gerard rayen

மார் 09, 2026 08:04

நல்வாழ்த்துக்கள்

Rate this



நல்வாழ்த்துக்கள்

Rate this


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us