sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

திருக்குறளை அரபி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் தமிழர்

/

திருக்குறளை அரபி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் தமிழர்

திருக்குறளை அரபி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் தமிழர்

திருக்குறளை அரபி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் தமிழர்

2


பிப் 23, 2026

Google News

பிப் 23, 2026

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய் : பேராசிரியர் ஏ. பஷீர் அஹமது ஜமாலி மொழிபெயர்த்த திருக்குறளின் அரபி மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்களை துபாய் முஹம்மது பின் ராஷித் நூலக அலுவலர் அமீரா பஹத் இடம் அன்பளிப்பாக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வழங்கினார்.


இதனை பெற்றுக் கொண்ட நூலக அலுவலகர் அமீரா பஹத், தொடர்ந்து தமிழ் நூல்களை நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கி வருவதற்காக நன்றி தெரிவித்தார்.


பேராசிரியர் ஏ. பஷீர் அஹமது ஜமாலி, இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகில் உள்ள வரவணி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.


புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரபி மொழி பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். லிபியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் அரபி மொழி பெயர்ப்பாளராகவும் பணிபுரிந்த அனுபவமிக்கவர்.


இவர் தமிழில் ஏழு நூல்களையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட மூன்று நூல்களையும், அரபி மொழியில் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஐந்து நூல்களையும் எழுதியுள்ளார்.


திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கும் பணிகளை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு (சிஐசிடி) மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியது.


இதனையடுத்து அந்த நிறுவனத்துக்காக திருக்குறளை தமிழ் மொழியில் இருந்து அரபி மொழிக்கு மொழிபெயர்த்தார்.


இந்த நூலானது உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.


இந்த நூல் குறளின் கவிதைச் சிறப்பு குறையாமல் அரபு மொழியில் மொழிபெயர்த்து, சர்வதேச அளவில் திருக்குறளைக் கொண்டு சேர்த்த முக்கிய மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.


அரபி மற்றும் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்த முதல் தமிழரான பேராசிரியர் பஷீர் அஹமதுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.


அவரது அரபி மொழிபெயர்ப்பு நூலை வளைகுடா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு சென்றடையும் பணியை ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் மேற்கொண்டுள்ளார்.


- துபாயிலிருந்து நமது வாசகர் ரிஷான் அஹமது



Advertisement

Advertisement


Rajadeen

பிப் 24, 2026 18:33

congratulations

Rate this


Rajadeen

பிப் 24, 2026 18:26

congratulations..

Rate this



congratulations

Rate this


Rajadeen

பிப் 24, 2026 18:26

congratulations..

Rate this


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us