/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி
/
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி
ஏப் 01, 2024

துபாய் : துபாய் நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடக்கமாக இறை வசனங்கள் ஓதப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்று வருவதற்காக முன்னாள் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் கல்லூரியில் உலக அளவிலான முன்னாள் மாணவர்களது பங்களிப்புடன் கட்டப்பட்டு வரும் நவீன கட்டிடத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.
நிர்வாகக் குழு செயலாளர் மன்னர் மன்னர் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகூர் ஹனிஃபா நௌஷாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். துபாய் அரசுத்துறையில் பணியாற்றி வரும் திருச்சி ஃபைசுர் ரஹ்மான், சொறிப்பாரைப்பட்டி ஜாஹிர் ஹுசைன், சூப்பர் சோனிக் நிறுவனத்தின் சாகுல் ஹமீது, ஃபுட் பாஸ்கெட் நிறுவனத்தின் வலசை ஃபைசல், அல் மஜாரா ஜாஹிர் ஹுசைன், ஆசிக் உள்ளிட்டோர் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
முன்னாள் மாணவர்கள் பலர் கல்லூரிக் கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விழாக்குழு செயலாளர் ஃபஜ்ருதீன் நன்றியுரை நிகழ்த்தினார். முன்னாள் மாணவர் நிர்வாகிகள் ஜாபர் சித்தீக், ரஹ்மத்துல்லா, நவாசுதீன், அனீஸ், மரைக்காயர் பட்டணம் சகுபர் சாதிக் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சி சிறப்புடன் நடக்க தேவையான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement