
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத்தில் யோகா பயிற்சி
குவைத்தில் 08/11/2025 அன்று SKY Yoga மங்காப் மனவளக்கலை மன்றம் சார்பாக ஃபாஹீல் Unity Centreல் காயகல்ப யோகா பயிற்சி கத்தார் பேராசிரியர் சுடலை முத்துவால் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுமார் 50 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். ஏ.என். நடராசன், எம். மகேந்திரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அருணா மாணிக்கவாசகம் வரவேற்புரையும் குருசாமி நன்றியுரையும் ஆற்றினர். காயகல்ப பயிற்சி, மதிய உணவுடன் நிறைவடைந்தது. மனவளக்கலை மன்றம் குவைத்தில் 20 ஆண்டுகளாக சால்மியா, அபுகலிபா, மங்காப், அபாசியா, ஃபாஹீல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
-குவைத்தில் இருந்து நமது செய்தியாளர் செல்லதுரை
Advertisement

