/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் இணையவழி மார்க்க சொற்பொழிவு
/
துபாயில் இணையவழி மார்க்க சொற்பொழிவு

துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிஸ் சார்பில் ஜூம் இணையவழியாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு டிவைன் பிளாக் மஜ்லிசின் நிறுவனர் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃஹ்ரூப் தலைமை வகித்தார். ஜலால் இறைவசனங்களை ஓதினார். முனைவர் பேராசிரியர் நாகூர் ரூமி 'உம்முஹாத்தில் மூமினீனின் அறிவாற்றல் ' என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் இலங்கையின் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், பிறைடிவியின் நிறுவனர் காயல் இளவரசு, கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன், இளையான்குடி அபுதாஹிர், முதுவை ஹிதாயத், திருச்சி ஜாஹிர் ஹுசைன், இலங்கை நிஸ்தர் ஆலிம், அதிரை முஹம்மது சலீம், மீரான் ஃபைஜி, மயிலாடுதுறை அபூ வஃபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement