/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
வேலைவாய்ப்பு
/
சிங்கப்பூர் வேலை அனுமதி பெறும் முறைகள்
/
சிங்கப்பூர் வேலை அனுமதி பெறும் முறைகள்
அக் 09, 2025

இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு பணியாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்ய வேண்டும் என்றால் கட்டாயமாக வேலை அனுமதி (Work Permit) அல்லது Employment Pass போன்றவைகள் பெற வேண்டும்.
மருத்துவம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
Employment Pass: உயர் கல்வி படித்தவர்கள் மற்றும் தேர்ந்த திறனாளிகள் Bachelors Degree/Professional Qualification, மாத சம்பளம் SGD 5,000+
S Pass: Diploma/ITI முடித்தவர்களுக்கு Diploma / Technical Qualifications, மாதம் SGD 3,150+, வயது 18 முதல் -50
Work Permit: குறைந்த திறனாளிகள், தாழ்வான சம்பளம் Secondary School Pass, வயது 18- முதல் 50, வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
முதலில் ஒரு சிங்கப்பூர் நிறுவனத்திலிருந்து வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
நிறுவனமே (Employer) தொழிலாளர் துறை (Ministry of Manpower, MOM) மூலம் வேலை அனுமதி விண்ணப்பிக்க வேண்டும்.
அடிப்படை ஆவணங்கள்: கல்வி சான்றிதழ், வேலை ஒப்பந்தம், போட்டோ, பாஸ்போர்ட் நகல் மற்றும் மருத்துவ சான்றிதழ்.
வேலை அனுமதி கிடைத்த பின்பு சிங்கப்பூர் செல்லவும், Bio-metric தகவல்கள் பதிவு செய்ய வேண்டும்.
அனுமதி பெறுவதற்கான நிபந்தனைகள்
வயது குறைந்தது 18, அதிகபட்சம் 50 முதல் -55.
கல்வி மற்றும் தொழில்துறையிலான தகுதிகள்.
வேலை தரும் நிறுவனத்தின் சம்மதம் மற்றும் விண்ணப்பம்.
சம்பளம் மற்றும் வேலை தன்மை MOM விதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
முக்கிய இணையதளங்கள்
சிங்கப்பூர் தொழிலாளர் துறை (MOM): www.mom.gov.sg
வேலை வாய்ப்பு தேவைப்படுமா? www.jobsbank.gov.sg
இந்த வழிமுறைகள் மூலம் சிங்கப்பூரில் இந்தியர்களுக்கான வேலை அனுமதி பெற முடியும்.
Advertisement

