/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் ஆஞ்சநேய ஜெயந்தி மஹோற்சவ கோலாகலம்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் ஆஞ்சநேய ஜெயந்தி மஹோற்சவ கோலாகலம்
சிங்கப்பூர் ஆலயத்தில் ஆஞ்சநேய ஜெயந்தி மஹோற்சவ கோலாகலம்
சிங்கப்பூர் ஆலயத்தில் ஆஞ்சநேய ஜெயந்தி மஹோற்சவ கோலாகலம்
டிச 31, 2024

சிங்கப்பூர் பிரபல வைணவத் தலமான சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய ஜெயந்தி மஹோற்சவம் டிசம்பர் 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான 22 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு அரங்கம் நிறை பக்தப் பெருமக்கள் நாள்தோறும் நிரம்பி வழிய காலை வேளையில் திருமஞ்சனமும் மாலையில் லட்சார்ச்சனையும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
நிறைவு நாளான 31 ஆம் தேதி ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமான் சந்தனக் காப்பு அலங்காரத்தில் ஜொலித்தமை கண்கொள்ளாக் காட்சியாகும். பக்தப் பெருமக்கள் நாள்தோறும் வடை மாலை சாற்றுவதும் வரிசை எடுத்துச் சிறப்பித்ததுவும் மெய்சிலிர்க்க வைத்தன. தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தலைமையில் முல மந்திர ஹோமம் நடைபெற்றபோது பக்தப் பெருமக்கள் ' வீர பக்த ஆஞ்சநேயப் பெருமானுக்கு ஜே....வாயு புத்ர ஆஞ்சநேய சுவாமிக்கு ஜே ' என முழங்கினர்.
ஆலய நிர்வாகம் வழிபாட்டிற்கும் அருள் பிரசாதத்திற்கும் அறுசுவை அன்னப் பிரசாதத்திற்கும் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement