/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் எட்டாம் நாள் நவராத்திரி விழா
/
சிங்கப்பூர் ஆலயத்தில் எட்டாம் நாள் நவராத்திரி விழா
சிங்கப்பூர் ஆலயத்தில் எட்டாம் நாள் நவராத்திரி விழா
சிங்கப்பூர் ஆலயத்தில் எட்டாம் நாள் நவராத்திரி விழா
செப் 30, 2025

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் எட்டாம் நாள் நவராத்திரி விழாவில் அம்பிகை ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினியாக காட்சி அளித்து அருள்புரிந்தார்.வழக்கம் போல மண்டபம்நிறை பக்தர்களிடையே தம் வெண்கலக் குரலில் ''அயிகிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வ வினோதினி நந்தநுதே “ பாடலை உருக்கத்தோடு பாடி விளக்கமும் அளித்தமை அருமை...அருமை.
மகிஷாசுர மர்த்தினி என்றழைக்கப்படும் அன்னை பார்வதி அசுரர்களின் அரசனான மகிஷாசுரனை வதம் செய்தார். இப்போரில் வெற்றி பெற்ற பின்னர் அன்னையின் சீற்றம் தணிந்தது. இவ்வேளையில் அன்னையின் அழகையும் அவர்தம் சிறப்பியல்புகளையும் போற்று முகமாகப் பாடப்பட்ட பாடலே இது. பராசக்தியைப் போற்றும் பல்வேறு ஸ்தோத்திரங்களில் மிகச் சக்தி வாய்ந்ததாக இது கருதப்படுகிறது.
நவராத்திரி நாட்களில் பாராயணம் செய்யும் போது நேர்மறையான மாற்றங்கள் நிகழும் என்பது ஐதீகம். அயிகிரி நத்தினி பாடல் 21 ஸ்லோகங்களைக் கொண்டது. இப் பாடலைப் பாடும்போது அச்சம் அகன்று வீரம் பிறக்கும். பக்தித் திருவிழாவான நவராத்திரி விழாவின் ஒவ்வொரு அம்சமும் மனித வர்க்கத்தை மேம்படச் செய்யவும் உலகிடை சுபிட்சம் பெருகவும் உதவும் என தலைமை அர்ச்சகர் ஆகம ப்ரவீண சிவஸ்ரீ நாகராஜ சிவாச்சாரியார் எடுத்துரைத்த போது “ ஓம் சக்தி....பராசக்தி “ முழக்கம் விண்ணதிர வைத்தது.
ஒவ்வொரு நாளும் இவர் அளிக்கும் விளக்கங்களைக் கொண்டு பக்தி ரசம் நனி சொட்டும் ஒரு நல்ல நூல் பிறக்கவும் வாய்ப்பு உள்ளது. கலையரங்கிலும் இதையொட்டியே நிகழ்வுகள் அமைந்தன. சுரேஷ்குமார் தலைமையிலான ஆலய மேலாண்மைக் குழு அருட் பிரசாதத்திற்கு மேலும் பெருமை சேர்க்குமாறு அறுசுவை அன்னப் பிரசாதத்தை வழங்கி மகிழ்வூட்டியது. நாளைய நாளுக்கு ஏங்குமாறு இன்றைய நிகழ்வுகளனைத்தும் நிறைவு பெற்றன.
- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement