/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா கோலாகலம்
/
சிங்கப்பூர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா கோலாகலம்
பிப் 08, 2025

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலய மஹா கும்பாபிஷேகம் நாளிது பிப்ரவரி 9 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெறவுள்ளதை யொட்டிப் பூர்வாங்கப் பூஜைகளான சுதர்சன ஹோமம் - சோடஸ மஹா லட்சுமி ஹோமம் - பிரவேச பலி - ரக்ஷக்ந ஹோமம் - வாஸ்து சாந்தி பூஜை - ஸோடஸ மகா கணபதி ஹோமம் முதலியவை ஆலய தலைமை அர்ச்சகர் சிவாகம ரத்ன - சிவாகமப் பிரவீண சிவ ஸ்ரீ நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் தமிழகத்திலிருந்து வந்துள்ள பிரபல வித்வப் பண்டிதர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு ஆகமப் பூஜைகளை நடத்தி வருகின்றனர்.
ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சுரேஷ் குமார் நன்கொடையாளர்களைக் கவுரவித்துச் சிறப்பித்தார். ஆலயம் வண்ணமயமாக ஆன்மிகப் பிரகாசத்துடன் ஜொலித்து வருகிறது. சிங்கப்பூர் பிரதமர் மாண்பமை லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுவதால் ஒவ்வொரு நிகழ்வம் சிறப்புற அமைய நிர்வாகம் விசேஷ கவனம் செலுத்தி வருகிறது.. மார்ஷலிங் பகுதியே விழாக் கோலம் பூண்டுள்ளது.
நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement