/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் திருக்குறள் விழா கோலாகலம்
/
சிங்கப்பூரில் திருக்குறள் விழா கோலாகலம்
ஜன 25, 2025

சிங்கப்பூர் இரண்டாவது திருக்குறள் விழா ஸ்ரீ அரசகேசரி சிவன் ஆலய திருமுறை மற்றும் திருக்குறள் மாணவர் சார்பில் ஜனவரி 19 ஆம் தேதி ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலய திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேனி சித்பவானந்தா ஆச்சார்ய பூஜ்ய ஸ்ரீ ஓங்காராநந்த மஹா சுவாமிகள் ஆசியுடனும் வழிகாட்டுதலுடனும் சிங்கப்பூரில் ஸ்ரீ அரசகேசரி சிவன் ஆலயத்தில் திருக்குறள் வகுப்பு 15 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு வாராவாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத் தகுந்ததாகும்.
இவ்வாண்டு திருமுறை ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர்.பேராசிரியர் இராம கருணாநிதி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. ஜி..சீனிவாசன் “ திருக்குறளும் பூஜ்யஸ்ரீ ஓம்காராநந்தா மகா சுவாமிகளும் “ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்றனர்.
ஏழாம் வகுப்பு முதல் பெரியவர் வரை இரு குழுக்களாக பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர். 40 -க்கு மேற்பட்டவரகள் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். ஸாத்விக் தமது சொந்தக் குரலில் திருக்குறளை இசையோடு பாடி அசத்தினார். “ சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் செல்லும் வழிகள் “ என்ற தலைப்பில் பார்வையாளர்கள் பங்கேற்று மகிழ்வித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கட்கு தேனி சித்பவானந்தா ஆசிரமத்திலிருந்து பரிசுப் பொருட்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஒப்பிவித்தல் போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்கு சுதா கணேசன், டாக்டர் ஏ.ஆர்.ராமசாமி மற்றும் சிங்கப்பூர் இந்து சபைத் தலைவர் ஜோதிநாதன் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
குடும்பத்தினருக்கான போட்டிகள் பரிசு பெற்றவர்களுக்கு ஜி.சீனிவாசன், வெங்கட்ராமன் மற்றும் குமார் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். நிறைவாக நன்றி நவின்ற ந.கணேசன் பூஜ்யஸ்ரீ ஓங்காரந்தா சுவாமிகளுக்கும், சென்னை கற்க கசடற அறக்கட்டளை, மற்றும் “ உயர் வள்ளுவம் “ வகுப்புவழி திருக்குறளைப் பறைசபற்றி வரும் இலங்கை கம்பவாரிதி முதலியோருக்கு நெஞ்சுநிறை நன்றி தெரிவித்தார். அரங்கம்நிறை விழா சிங்கப்பூர் திருக்குறள் ஆர்வலர்கட்குப் பெருவிருந்தாய் அமைந்தது.
- நமது செய்தியாளர் வெ.புருசோத்தமன்
Advertisement