sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 101ஆவது மாதாந்திர நிகழ்ச்சி

/

வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 101ஆவது மாதாந்திர நிகழ்ச்சி

வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 101ஆவது மாதாந்திர நிகழ்ச்சி

வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 101ஆவது மாதாந்திர நிகழ்ச்சி


மார் 15, 2026

Google News

மார் 15, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'வாழ்வியல் இலக்கியப் பொழில்' அமைப்பின் 101ஆவது மாதாந்திர நிகழ்ச்சி நடைபெற்றது. 'மூப்பில்லா முதல் மொழியே' என்ற சிங்கப்பூர்த் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு நிகழ்ச்சி தொடங்கியது.


பொதுப்பிரிவில், சென்னையிலிருந்து இணையம் வழியாக வெ. ஜெ. நிரஞ்சனா, தமிழ்ப் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினார். அமைப்பின் உறுப்பினர் உலகப்பன் வரவேற்றார். சாரா நாடிமுத்து சங்கீதம் பிரிவில் பாட்டு பாடினார். தொடர்ந்து வாழ்வியல் இலக்கியப் பொழிலின் 'பொழில் வாழ்த்துப் பாடல்” இசைக்கப்பட்டது.


சிறுவர்கள் அங்கத்தில், சாரா நாடிமுத்து 'தமிழுக்கும் அமுதென்றுபேர்' என்ற பாடலை பாடினார். சரவணன் முகிலெயினி, 'இன்னா செய்தாரை' எனத் தொடங்கும் திருக்குறளை அடிப்படையாக கொண்டு, கதை கூறினார். வர்ணிகா வினேஷ் மனோ தமிழ்ப் பாடல் பாடினார். தமிழோவியாஅருள் பிரகாஷ் 'திணைமொழி ஐம்பது' பாடலும், நன்னெறி கதையும் கூறினார். மேகவர்தினி அருள்பிரகாஷ் 'தமிழ்ப்பாடல்' பாடினார்.


பொழிலின் தலைவர் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி அறிமுகவுரையில் 'மாலை' என்னும் தலைப்பில் பல்வேறு இலக்கியக் குறிப்புகளுடன் பேசினார்.


தீபிகா சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் சுவாரசியான விளையாட்டு போட்டிகளை நடத்தினார். சிறுவர், சிறுமிகளுக்கு தமிழ் ஆர்வத்தை தூண்டும் விதமாக வயதிற்கேற்ப தமிழ் பயிற்சி தாள்கள் கொடுக்கப்பட்டன.


கற்பகலட்சுமி 'மாதவ பெண்கள்' என்னும் தலைப்பில் சிற்றுரையாற்றினார். சிறப்புரையில் 'இலக்கியத்தில் பெண்கள்' என்னும் தலைப்பில் ஜெர்மனியிலிருந்து தமிழ்வான் அவை அமைப்பின் நிறுவுநர் சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) இணையம்வழி பேசினார்.


நிகழ்ச்சி முழுவதும் காணொளியாக முகநூல் வழி நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சி பொழில் பண்பலையில் நேரலையாக ஒலிபரப்பப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.


கற்பக லட்சுமி மற்றும்a மோகனபிரியா நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர். உஷாகிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.


முகநூலில்கண்டுகளிக்க:


https://www.facebook.com/share/v/1WjnDSfrtr/?mibextid=wwXIfr


அமைப்பின்இணையப்பக்கம்: https://www.ilakkiyapozhil.com


- சிங்கப்பூரிலிருந்து நமது வாசகர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us