/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
சான்பிரான்ஸிஸ்கோவில் அகதவ பயிற்சி கோலாகலம்
/
சான்பிரான்ஸிஸ்கோவில் அகதவ பயிற்சி கோலாகலம்
ஜூன் 16, 2024

மூலாதாரத்து மூண்டு எழு கனலைக் காலால் எழுப்புகின்ற கலையை எளிமைப்படுத்தி உலகப் பொதுவுடையாக்கி வாரி வழங்கிய ஜெகத்மகா குரு, குண்டலினிப் பேராசான், தத்துவ தவ ஞானி, ஞானவள்ளல்வழி நின்று இயம, நியம, ஆசன, பிராணாயாம, பிரத்யாகார, தாரண, தியான, சமாதி நிலைகளை வையகம் முழுவதும் பரப்பி புத்தொளிப் பாதையை வகுத்தளித்து வரும் திருமூர்த்தி மலை உலக சமாதன அறக்கட்டளை நிறுவநர் ஞான பீடாதிபதி ஜெகத்குரு மகா மகரிஷி குருமஹான் பரஞ்ஜோதியார் மே மாதம் 26 ஆம் நாள் சான் பிரான்ஸிஸ்கோ வருகை புரிந்ததிலிருந்து பல்வேறு ஆன்மிகப் பணிகளை மேற்கொண்டார்.
ஆர்வத்தோடும் வேட்கையோடும் பங்கேற்ற ஞானவான்களுக்கு தமக்கே உரிய புன்னகை ததும்ப மேற்கொண்ட யோகம், தியானம், சக்கரம், ஞானம் பற்றிய தத்துவ விளக்கங்கள் அங்குள்ள இந்தியரல்லாதோர் உள்ளிட்ட பலரை ஈர்த்தது. தங்களுக்குள் இருக்கும் அமானுஷ்ய சக்திகளை வெளிப்படுத்தும் சித்தி, சுத்தாத்வைத சுப போக இருப்பு நிலையாலே, ஸ்திரத் தன்மையாலே, சங்கல்பத்தாலே உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயம் என்பதை குருமஹான் விளக்கத்தால் பலர் வியந்து போற்றி வழிபட்டனர்.
பேரொளியாக உள்ள இறைவனிடத்தே சிற்றொளியாகிய ஆன்மாக்கள் சேர்ந்திருக்கும் முறைகள் அனைத்தையும் தம் பேரறிவு ஞானத்தால் அறிந்து தெளிவாக உணர்ந்திருப்பவர்களே யோகியர் என குருமஹான் விளக்கியபோது அவையோர் மெய்சிலிர்க்கலாயினர்.
சன்னிவேல் நகரத் துணை மேயர் முரளி ஸ்ரீநிவாசன் சற்குருவை தரிசித்து அருளாசி பெற்றார். இந்திய வம்சாவளியைச் சார்ந்த தமிழர் ஒருவர் முதன்முறையாக இத்தகு பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத் தகுந்ததாகும். தமது இல்லத்தில் ஈரானியப் பாரம்பரிய விருந்தளித்து மரியம் மகிழ்வித்தார். மற்றும் ஓரிட், அவி ( இஸ்ரேலியர் ) சற்குருவை பூங்கொத்து சமர்ப்பித்து தரிசித்ததுடன் கலிபோர்னியாவில் ஜீவரக்க்ஷா முகாமிற்கும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.
மே மாதம் 26 இல் மேற்கொண்ட ஆன்மிக நல்லெண்ண யாத்திரை ஜுன் 13 இல் நிறைவு பெற்றது. ஜுன் 13 ல் தாயகம் திரும்பிய குருமஹான் பெங்களூரு விமான நிலையத்தில் அறங்காவலர் கே.விநாயகம் தலைமையில் திரளாகக் கூடியிருந்த அவர்தம் சீடர்களால் மலர்க்கொத்து சமர்ப்பித்து வரவேற்கப்பட்டார். குருமஹான் நமது செய்தியாளரிடம் உரையாற்றுகையில் சர்வ தேச யோகா தினம் நெருங்கி வரும் வேளையில் வெளி நாடொன்றில் இந்தியரல்லாதோர் உள்ளிட்ட நூற்றொருவர் கலந்து கொண்ட அகதவப் பயிற்சி முகாம் புதியதோர் எழுச்சியைத் தோற்றுவித்ததாகவும் அதனைத் தொடரும் முயற்சியில் அவர்களுக்களித்த பயிற்சி தம்மை மிகவும் கவர்ந்ததாகவும் தெரிவித்தார்.
- தினமலர் வாசகர் தமிழ்க்கோ
Advertisement