/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளையின் தந்தையர் தின விழா
/
குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளையின் தந்தையர் தின விழா
குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளையின் தந்தையர் தின விழா
குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளையின் தந்தையர் தின விழா
ஜூன் 20, 2024

ஹூஸ்டன் குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை, ஜூன் 9, 2024 அன்று மீனாட்சி கோவில் கல்யாண மண்டபத்தில், தந்தையர் தின விழாவை சிறப்பாக நடத்தியது. சமூக சேவையில் பெருமளவு பங்களித்த தந்தைகளான லட்சுமிநாராயணம் செட்டி கடம்பம், சாம் கண்ணப்பன் மற்றும் வேணுகோபால் மேனன் ஆகியோரை கௌரவித்தனர். மூவரும் ஸ்லிங்ஷாட் எனும் முப்புறச் சக்கர வண்டியில் வருகை தந்து மகிழ்ச்சியைக் கூட்டினர்.
அரங்கில் வரவேற்புரையை உரையை அறக்கட்டளைச் செயலாளர் ஆதி கோபால் அதிரடி உரையால் தொடங்கினார். பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் சார்ந்த படைப்புகளை கலை வடிவில் வரைந்து கலைப் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை அளித்தனர். வெற்றியாளர்களுக்கு அறக்கட்டளையின் நிர்வாகிகள் கைகளால் விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவின் சிறப்புக்குரிய பேச்சாளர் உமையாள், 'தாயுமானவர்' என்ற தலைப்பில் எழுச்சியூட்டும் உரையை நிகழ்த்தினார். இவர் 'குறள் சுடர்' எனப் பட்டமளித்து பாராட்டப்பட்டார். இவரின் தாயார், ஸ்ரீ ராஜா ராஜன் CBSE பள்ளியின் முதல்வர் வடிவாம்பாள் சுந்தர் 'சிந்தனை சிற்பி' என்ற பட்டம் பெற்றார். அவர்களின் தமிழ் மற்றும் கல்வி தொண்டை பாராட்டி இவ்விருது அளிக்கப்பட்டது.
அறக்கட்டளையின் தலைவி மாலா கோபால், சமுதாய சேவையில் சிறந்த பங்களிப்பை செய்த உயர்நிலை பள்ளி மாணவர்களை கௌரவித்தார். இதன் பின், கலை நிகழ்ச்சிகளில், அபிநவ் வெங்கடராமன் மற்றும் ஆதி கோபால் பாடல் நிகழ்ச்சி மற்றும் பார்த்திபன் ரவிக்குமார் மற்றும் ஆதி கோபால் நடன நிகழ்ச்சி பாராட்டுப் பெற்றது.
இந்நிகழ்ச்சியில் டாலஸ் நகரைச் சேர்ந்த குமரி லயா ரச்னா பிரவீன் 1330 குறளையும் மனப்பாடமாக ஒப்பித்து சாதனை படைத்ததையொட்டி கௌரவிக்கப்பட்டார். தந்தையர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி gwf தலைவி மாலா கோபால் நன்றி உரையுடன் நிறைவு பெற்றது. குமார்ஸ் ஹூஸ்டன் உணவகத்தினால் வழங்கப்பட்ட சுவையான இரவு விருந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எழுத்து: நந்து ராதாகிருஷ்ணன்
-நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement