sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

வீரப்பெண்ணே வீரப்பெண்ணே!

/

வீரப்பெண்ணே வீரப்பெண்ணே!

வீரப்பெண்ணே வீரப்பெண்ணே!

வீரப்பெண்ணே வீரப்பெண்ணே!


மார் 08, 2026

Google News

மார் 08, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்னேறு முன்னேறு வீரப்பெண்ணே முன்னேறு!


வென்று முடிக்கும் வரை கண்துஞ்சாமல் நீ முன்னேறு!


பட்டமரம் கூட துளிர்விடும் நம்பிக்கை என்ற நீர் இறைத்தால்!

பட்டுப்போன வாழ்க்கை கூட பட்டுமெத்தையாகுமே முயற்சி என்ற உரமிட்டால்! (முன்னேறு)


முடிப்பத்தல்ல வாழ்க்கை வென்றுமுடிப்பதன்றோ வாழ்க்கை!

தூக்குகயிறுகூட தூக்கிவிடும் கயிறாகும் துவண்டுவிடாமல் நீ இருந்தால்! ( முன்னேறு)


தோல்வி கூட தாங்கும் படியாகும் சொந்த உழைப்பின் மீது நேசம் வைத்தாள்

எட்டாகனியும் எட்டுமே ஏணி என்ற ஊக்கமிருந்தாள்


உயிர்ப்பின் வித்தை மகளே நீ அறிந்தாய்

ஓர் உயிரை உருவாக்கும் வலிமை கொண்டாய்


உன்னதத்தின் உச்சமடி என்வீரத்தமிழ் பெண்ணே


காலனும் உனக்கு துச்சமடி கலங்காய் என் வீரப்பெண்ணே!


தளராமல் நடைபோடு தரணி உன்னை கொண்டாடுமே

தடுத்திடும் சமூகம்கூட உன்னை தங்கதட்டில் இனி ஏந்துமே!


வீழாய் நீ வீழாய்

தாழாய் என்றும் நீ தாழாய் தங்கத்தமிழ்பெண்ணே என்வீரப்பெண்ணே!


- கனடாவிலிருந்து நமது வாசகர் ஆற்றல் மறவன்

https://youtu.be/ll3lin22_y8


https://www.youtube.com/watch?v=ll3lin22_y8&t=5s



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us