sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை புதிய நிர்வாகிகள் (2024- 2026)

/

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை புதிய நிர்வாகிகள் (2024- 2026)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை புதிய நிர்வாகிகள் (2024- 2026)

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை புதிய நிர்வாகிகள் (2024- 2026)


ஜூன் 07, 2024

Google News

ஜூன் 07, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைஎன்பது, வட அமெரிக்காவில் ஆங்காங்கே உள்ள தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பாகும். பேரவையில் தற்போது கிட்டத்தட்ட 62 தமிழ் அமைப்புகள் உறுப்புச் சங்கங்களாக உள்ளன. 2024-2026 ஆம் ஆண்டுக்கான செயற்குழுத் தேர்தல் அண்மையில் இடம் பெற்றது. பேரவையின் பேராளரும் நியூயார்த் தமிழ்ச்சங்கத் தலைவருமான கதிர்வேல் குமாரராஜா முதன்மைத் தேர்தல் அலுவலராகப் பணியாற்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

பேரவையின் தற்போதைய துணைத்தலைவர் விஜய் மணிவேல், துணைப்பொருளாளர் எழிலன் இராமராஜன் ஆகியோரின் தலைமையிலான பேரவை மேன்மை அணியினர் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்ச்சங்கங்களின் தமிழ்க்கலை, பண்பாடு சார்ந்த முன்னெடுப்புகளுக்கு, உள்ளூர் அரசாங்கத்தின் உதவித்தொகை பெற்றுத்தருவது, பண்பாட்டுத்தளத்தில் சிறப்புத் திறங்களை வெளிப்படுத்தும் மாணவர்களுக்குப் பரிசில் வழங்குவது, கல்விப்புலத்துக்கான மேம்பாட்டுத்துறை அமைப்பது, நிர்வாகத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களை முன்வைத்துப் போட்டியிட்ட இந்த அணியினர் வெற்றி வாகை சூடியுள்ளனர். வெற்றி பெற்றவர்களின் விபரம் கீழே வருமாறு:


தலைவர்: விஜய் மணிவேல் (மிசெளரி தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர்); துணைத்தலைவர்: எழிலன் இராமராஜன் (அட்லாண்டா தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர்); செயலாளர்: முனைவர் கபிலன் வெள்ளையா (நியூஜெர்சி தமிழ்ப்பேரவை நிறுவனத் தலைவர்); இணைச்செயலாளர்: ஜான்சிராணி பிரபாகரன் (விஸ்கான்சின் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர்); பொருளாளர்: வள்ளிக்கண்ணன் மருதப்பன் (கனடா தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர்); இணைப்பொருளாளர்: சுபா சுந்தரலிங்கம் (போஸ்டன் தமிழ் அசோசியேசன் முன்னாள் துணைத்தலைவர்).


நிர்வாக இயக்குநர்கள்: முனைவர் பாரதி பாண்டி (கரொலைனா தமிழ்ச்சங்கத் தலைவர்), வெற்றிவேல் பெரியய்யா, (சியாட்டில் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர்), ஷான் குத்தாலிங்கம் (டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் முன்னாள் தலைவர்), கார்த்திகேயன் பெருமாள் (சான்பிராஸ்கோ வளைகுடாப்பகுதித் தமிழ்மன்றப் பேராளர்);


இளையோர் பிரதிநிதிகள்: ஆர்த்திகா குமரேஷ் (கனடியத் தேசியத் தமிழர் அவை), ரோஷன் ஸ்ரீனிவாசன் (ரிச்மண்ட் தமிழ்ச்சங்கம்)


வெற்றிபெற்ற இவர்கள் சான் ஆண்ட்டோனியோநகரில் நிகழவிருக்கும் பேரவை ஆண்டுவிழாக்கூட்டத்தின் போது பொறுப்பேற்கவுள்ளனர்.


-பழமைபேசி, பேரவை மேன்மை அணி ஒருங்கிணைப்பாளர்


www.united4fetna.com



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us