/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
சான் ஆண்டோனியோவில் ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா
/
சான் ஆண்டோனியோவில் ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா
ஏப் 25, 2025

இந்தியாவின் ஆணிவேரே வேற்றுமையில் ஒற்றுமை! அதனை நிரூபிக்கும் விதமாக இந்தியா அசோசியேஷன் ஆப் சான் ஆண்டோனியோ -IASA சீரும் சிறப்புமாக அனைத்து மாநில மக்களும் ஒன்றாக ஒற்றுமையாக கூடி மகிழ்ந்தது தான் ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா !
ஏப்ரல் 19 ஆம் தேதி சான் ஆண்டோனியோவில் உள்ள மிகப் பிரபலமான திறந்தவெளி இடமான ஹெமிஸ்பியரில் மதியம் 2 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சிகள் இரவு டீஜே-டிஸ்க் ஜாக்கி இசை நிகழ்வுடன் 11 மணி வரை அட்டகாசமாக ஆரவாரமாக நடந்தேறியது.
நம் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் சிறப்பு உண்டு. அதனை நிரூபிக்கும் வகையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரவர் மாநில மொழிப் பாடல்களுக்கு ஆடியும் தனிச் சிறப்பை காட்டியும் மகிழ்வித்தனர்.
இந்த நாள் நிகழ்வுகள், இவ்வாறு அமர்க்களமாய் எவ்வித இடையூறும் இன்றி நடக்க இந்தியா அசோசியேஷன் ஆப் சான் ஆண்டோனியோ -IASA குழுவினரின் தீவிரத் திட்டமிடலே முக்கிய காரணம்!
இதற்காக இரண்டு மாதங்கள் பல சந்திப்புகள் நடத்தி திட்டமிட்டு குழுவினர்களாகப் பிரிந்து ஆளுக்கொரு வேலையைப் பகிர்ந்து இந்தியாவின் அனைத்து மாநில சங்கங்களுடன் பேசி அவரவர் நிகழ்ச்சிகளை வழங்க கேட்டு அதனை வகைப்படுத்தினார். பின்னர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்பது, வரும் பார்வையாளர்களுக்கான இருக்கைகள், அனைவருக்கும் விருந்தளித்தல், உணவு மற்றும் பிற கடைகளை ஒழுங்குபடுத்தி அமைத்தல், பாதுகாப்பு என ஏகப்பட்ட பணிகள் தலைவர் இராஜகுரு பரமசாமி தலைமையில் இக்குழு அருமையாய் செய்து முடித்தனர்!
மேலும் இது பொது நிகழ்வு என்பதால் உள்ளூர் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, காவலர்கள் அனுமதி பெற்று, எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி இக்குழுவின் ஆசைப்படி வெகு சிறப்பாக நடந்தது. மக்கள் கூடி மகிழ்ந்தனர் இந்நாளில் !
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement