/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
அமெரிக்க தினமலர் வாசகர் வீட்டில் நவராத்திரி
/
அமெரிக்க தினமலர் வாசகர் வீட்டில் நவராத்திரி
அக் 20, 2024

அமெரிக்க அரிசோனா மாகாணம் பீனிக்ஸில் உள்ள தினமலர் வாசகர் காசி அருணாச்சலம் அவரது வீட்டில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்ட அனுபவத்தை தினமலர் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
எங்கள் கொலு கண்காட்சியின் முக்கிய சிறப்பு நிகழ்ச்சி பக்த ப்ரகலாதன் 4D ஷோ ஆகும். இதனை கவின் காசி அருணாச்சலம் மிக அழகாக வடிவமைத்து உருவாக்கியிருந்தார். கவின் தற்போது 15 வயதாகும் மற்றும் அமெரிக்காவின் அரிசோனா மாநிலம், பீனிக்ஸில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த 4D நிகழ்ச்சியில் பக்த ப்ரகலாதனின் பக்தி மிக அழகாக அரங்கேற்றப்பட்டது. விஷ்ணு பெருமான் மற்றும் பிரம்மா தேவரின் ஹோலோகிராம்களும், காற்று மற்றும் புகை விளைவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டு, நிகழ்ச்சியின் கவர்ச்சியை மேலும் உயர்த்தியது. இந்த பக்த ப்ரகலாதன் 4D ஷோ யூடியூபில் காணலாம்:
https://www.youtube.com/watch?v=F4Cfx5S9O4Q
பீனிக்ஸ் அரிசோனாவில் இருந்து எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்தனர். கொலு தினங்கள் அனைத்திலும் வருகைதந்தவர்களுக்கு முழு இரவு உணவுடன் விழா கொண்டாடப்பட்டது.
கவின் கடந்த சில ஆண்டுகளாக இவற்றைத் தொடர்ந்து செய்து வருகிறார். 2023ல், நவராத்திரி முழுவதும் இராமாயணம் puppet நாடகம் பகுதி தினமும் 40 க்கும் மேற்பட்ட முறை நேரலையில் நடத்தப்பட்டது. Puppet, ஒலி கட்டுப்பாடு, பின்னணி மாற்றம் போன்றவற்றை கவின் ஒருவரே சுயமாகச் செய்து, இராமாயண கதை வாழ்க்கையில் கொண்டு வந்தார். இதைப் பார்க்க யூடியூப் இணைப்பு:
https://www.youtube.com/watch?v=_rdZ9_4M7Cg
2022ல், கவின் காளிங்க நர்த்தனம் Puppet நாடகம் நிகழ்த்தினார். இதையும் நவராத்திரி கொண்டாட்டத்தில் காணலாம். அந்த நிகழ்ச்சியை யூடியூபில் பார்க்கலாம்:
https://www.youtube.com/watch?v=cXO2m5rJgtY&t=11s
இந்த இனிய அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள மிகவும் மகிழ்ச்சி.
- தினமலர் வாசகர் காசி அருணாச்சலம்
Advertisement