/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
பென்சில்வேனியா ஹாரிஸ்பர்க் வட்டாரத் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா
/
பென்சில்வேனியா ஹாரிஸ்பர்க் வட்டாரத் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா
பென்சில்வேனியா ஹாரிஸ்பர்க் வட்டாரத் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா
பென்சில்வேனியா ஹாரிஸ்பர்க் வட்டாரத் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா
மே 21, 2024

தமிழ் உணர்வாளர்கள் பலர் ஒன்றிணைந்து தமிழ் மொழி, இனம், கலை, பண்பாடு மற்றும் தமிழ் கூறும் நல்லுலகின் அறிவுசார் விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்குக் கற்பித்து வழிகாட்டும் திண்ணத்துடன் ஹாரிஸ்பர்க் வட்டாரத் தமிழ்ச்சங்கம் (HATS) 1970-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்தமிழ்ச்சங்கம் மே 18 ஆம் நாள் சித்திரைத் திருவிழாவை பென்சில்வேனியா, எனோலா, ஷாள் தொடக்கப் பள்ளியில் கொண்டாடியது.
தலைவர் ராம்குமார் சௌந்தரபாண்டியன், செயலாளர் ஜாபர் ஹாஜாமொஹிதீன், பொருளாளர் விக்னேஷ் சுப்ரமணியன், HATS உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து விழா ஏற்பாடுகளைச் சிறப்புடன் செய்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக, பழனி குமணன் நெடுமாறன் மற்றும் அவரது மனைவியார் கலந்து கொண்டனர். பழனி குமணன் நெடுமாறன் குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். அவருக்கு HATS சார்பாக திருவள்ளுவர் விருது வழங்கி கவுரவிக்கபட்டது.
மதுரையில் வசிக்கும் மருத்துவர் ஆனந்த் ராமசந்திரனுக்கு 22 ஆண்டு கால மருத்துவ சேவை மற்றும் கொரோனா காலங்களில் சிறப்பாக பொது சேவை செய்தமைக்காக மக்கள் சேவை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் ராஜமாணிக்கத்திற்கு நெடுநாள் தமிழ் தொண்டாற்றியதற்க்காக தமிழர் விருது வழங்கப்பட்டது. இது தவிர ஹாரிஸ்பர்க் வட்டாரத் தமிழ்ச் சங்கம் சார்பாகத் தமிழ் பேச்சு போட்டி, சதுரங்க போட்டி, உணவு போட்டி நடந்தது. இந்தப் போட்டிகள் மாணவர்கள் தங்கள் திறமைகள், அறிவு மற்றும் திறன்களை வெளிப்படுத்தவும், ஆரோக்கியமான போட்டி மற்றும் மேலும் மேலும் கற்க வேண்டும் என்ற உணர்வை வளர்க்கும் வகையிலும் அமைந்தன.
நானூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு துறைகளில் சிறந்த சாதனைகளுக்காக 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு HATS விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு உறுப்பினர்கள், செயற்குழு மற்றும் தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு இல்லாமல் இந்த நிகழ்வு ஒரு அற்புதமான வெற்றியடையச் சாத்தியமில்லை.
பல போட்டியாளர்கள், நடன இயக்குனர்கள், MC உறுப்பினர்கள், கேளிக்கைக் குழு, உணவு குழு, மதிப்பீட்டாளர்கள் மற்றும் திரைக்aகுப் பின்னால் ஆதரவளித்த அனைவரும் இவ்விழா வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
கல்வி, கலை, பண்பாடு என அனைத்தையும் தமிழ் உணர்வோடு அடுத்த தலைமுறையினரைச் சென்றடையப் பாடுபடும் ஹாரிஸ்பர்க் வட்டாரத் தமிழ்ச்சங்க சேவை மேலும் தொடரட்டும்!
- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்
Advertisement