/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
பிப்., 27 வரை அட்லாண்டாவில் தமிழ் மொழி வாரம்
/
பிப்., 27 வரை அட்லாண்டாவில் தமிழ் மொழி வாரம்
பிப் 25, 2026

அமெரிக்காவில் வாழும் நமது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாக, அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் சீரிய முயற்சியால் தமிழ் மொழி வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழ்ச் சங்க குழுவினர் மற்றும் உறுப்பினர்கள் புடைசூழச் சென்று ஜார்ஜியா மாநிலத்தின் ஆளுநர் பிரையன் கெம்ப் மற்றும் ஜார்ஜியாவின் முதல் பெண்மணி மார்ட்டி கெம்ப் ஆகியோரிடமிருந்து காலை 10.00 மணியளவில் பெற்றுக்கொண்டனர். உலகம் முழுவதும் உலகத் தாய் மொழி நாள் கொண்டாடப்படும் சிறப்பான நேரத்தில், “தமிழ் வாரம்” பிப்ரவரி 21 முதல் 27 வரை என்று அட்லாண்டாவில் பறைசாற்றப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, புலம் பெயர்ந்து வந்திருக்கும் நாம், நமது மொழியின் சிறப்பையும் அதன் பண்பாட்டையும் பாதுகாத்து ஒற்றுமையுடன் தமிழை தலைமுறை தாண்டியும் கொண்டு செல்ல வேண்டியதன் முதன்மையை வலியுறுத்துகிறது.
Advertisement

