/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
மெக்சிகோவில் இந்தியப் பாரம்பரியத்தின் எழுச்சி: பொங்கல், சங்கராந்தி, லோஹ்ரி கொண்டாட்டம்
/
மெக்சிகோவில் இந்தியப் பாரம்பரியத்தின் எழுச்சி: பொங்கல், சங்கராந்தி, லோஹ்ரி கொண்டாட்டம்
மெக்சிகோவில் இந்தியப் பாரம்பரியத்தின் எழுச்சி: பொங்கல், சங்கராந்தி, லோஹ்ரி கொண்டாட்டம்
மெக்சிகோவில் இந்தியப் பாரம்பரியத்தின் எழுச்சி: பொங்கல், சங்கராந்தி, லோஹ்ரி கொண்டாட்டம்
மார் 03, 2025

மெக்சிகோ தமிழ் மன்றமும் தமிழ்ச் சங்கமும் இணைந்து, 750க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பொங்கல், மகர சங்கராந்தி, லோஹ்ரி ஆகிய திருவிழாக்களை சிறப்பாக ஒருங்கிணைத்து கொண்டாடினர். இந்திய கலாச்சாரத்தின் ஒற்றுமையையும், பாரம்பரியப் பெருமையையும் உலகறியச் செய்த 2025 ஆம் ஆண்டின் இந்நிகழ்ச்சி பெரும் வெற்றியடைந்தது. மெக்சிகோவில் இந்திய கலாச்சாரத்தின் சுகமான எழுச்சி பரவியதோடு, அவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். தமிழ் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் போற்றும் இந்நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
வாழை இலை விருந்து - பாரம்பரிய உணவு முறை: இந்த சிறப்பு விழாவின் முக்கியமான அம்சமாக வாழை இலை உணவு விருந்து இருந்தது. தன்னார்வலர்களும், நிர்வாகக் குழுவும் ஒருமித்துக் கூட்டமாக, பாசத்தோடும், அன்புடனும் சமையல் செய்து, உளமாற உணவு பரிமாறப்பட்டது. பாரம்பரிய உணவின் சுவை, உள்ளத்தோடு இணைந்த அனுபவமாக அமைந்தது.
நன்றி தெரிவிக்கும் சிறப்பு விருந்து: இந்த விழாவை வெற்றிகரமாக நடத்த உதவியவர்களின் அற்பணிப்பை சிறப்பிக்கும் விதமாக, விழா குழுவினரால் ஒரு சிறப்பு நன்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 150 பேருக்கு நட்சத்திர ஹோட்டல் தரத்தில் அசைவ உணவுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு, விழாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் ஒரு நன்றிக்கடனாக அமைந்தது.
விழாவின் வெற்றிக்கு முக்கியக் குழு: இந்த மிகப்பெரிய விழாவின் வெற்றிக்கு பின்னணியாக, ஊன்றுகோலாக இருந்த நிர்வாகக் குழு: •புருஷோத்தமன் அழகிய மணவாளன் •அன்புவேல் நாகரத்தினம் •சதீஷ் யுவராஜ் •ஷாநவாஸ் ரஷீத் •கௌதம் தனபாலன்க்ஷ •கணேசன் வடிவேல்
மெக்ஸிகோவில் இந்திய கலாச்சார ஒற்றுமையின் வளர்ச்சி: இந்திய சமூகத்தின் பண்பாடுகளை நெறிப்படுத்தும் வகையில், மெக்சிகோவில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. இந்நிகழ்ச்சி ஒரு புதிய மைல்கல் ஆக அமைந்தது, எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக இந்தப் பாரம்பரிய திருவிழாக்கள் நடத்தப்படும் என்பதற்கான உறுதிமொழியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கலாச்சாரத்தின் மகிழ்ச்சியையும், அதன் சூழலின் மென்மையும், மனநிறைவையும் வெளிப்படுத்தும் இவ்விழா, உலகெங்கும் இந்தியர்களின் ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. செய்திப் பகிர்வு: - புருஷோத்தமன் அழகிய மணவாளன்
- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்
Advertisement