sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

சிவராத்திரி நன்நாளில் அரங்கேறிய திருவிளையாடல் புராணம்!

/

சிவராத்திரி நன்நாளில் அரங்கேறிய திருவிளையாடல் புராணம்!

சிவராத்திரி நன்நாளில் அரங்கேறிய திருவிளையாடல் புராணம்!

சிவராத்திரி நன்நாளில் அரங்கேறிய திருவிளையாடல் புராணம்!


மார் 06, 2025

Google News

மார் 06, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவ புராணங்கள் ஏராளம், வடக்கிலும் தெற்கிலும் பலவேறு கதைகளும் உண்டு. குறிப்பாக சிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது எதனால் கொண்டாடப்படுகிறது என பல கதைகள் கூறப்படுகின்றன அதில் முக்கியமானதாக சொல்லப்படுவது விஷ்ணு பகவானும் பிரம்ம தேவனும் சிவபெருமானின் விஷவரூப தரிசனம் காணுதல், சதி தேவி எனும் பார்வதி தன்னை தட்சனின் யாகத்தில் தீக்கிறையாக்கி பின் சிவனை அடைதல், அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்தல், பாற்கடலை கடைந்தபோது வந்த ஆலகால நஞ்சை உண்ட சிவனை பார்வதி காத்து அதை உடலில் கலக்காதவாறு தடுத்தல் என கதைகள் சொல்வதுண்டு. இந்த சிவராத்திரி நன்நாளில் இரவு முழுவதும் விழித்திருந்து சிவ தலங்களுக்கு சென்று நான்குகால பூஜையில் கலந்து கொண்டால் மறுபிறப்பு அற்ற நிலையை அடையலாம், மற்றும் இந்த பிறப்பில் செய்த பாவங்களில் இருந்தும் விமோசனம் அடையலாம் என்பது ஐதீகம்.

இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் கோண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் பிப்ரவரி மாதம் 25ம் தேகதி உலகமெங்கும் உள்ள சிவஆலயங்களில், குறிப்பாக அமெரிக்காவில் மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்ச்சியம்மன் கோயிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நான்கு கால பூஜை, இசைக்கச்சேரி மற்றும் சிவபுராண நாட்டிய நாடகம் என அணைத்தும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு நடந்தேறியது. இதை கோயிலின் நிர்வாக குழு தலைவர் சுந்தரம், பொருளாளர், கலை இயக்குனர் சதீஷ் மற்றும் பிரவீன் என பலர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


இதில் சிவ புராண நாட்டிய நாடகத்தில் இருபதிற்கும் மேற்பட்ட கலைஞர்களை கொண்டு பத்திற்கும் மேற்பட்ட சிவ புராண கதைகளை தொகுத்து வழங்கினர். இது இரண்டரை மணிநேரம் முழு நீளத்திரை காவியமாக கதைக்குள் ஈர்த்ததாகவும், இது வியப்பாக இருந்ததாகவும் பாரட்டு தெரிவித்தனர். இந்த நாட்டிய நாடகத்தில் நாரதராக ஜானகி மற்றும் பிரம்மாவாக நடித்த அருள் மற்றும் தக தக என ஆடவா என்ற பாடலுக்கு நடனமாட பக்தி பரவசமாக அனைவரும் இறைவனின் ஆனந்த தாண்டவத்தை கண்டு ரசித்தனர். சிவ பெருமானாக கலை இயக்குனர் கார்த்திக்கைச் சிறப்பாக ஒப்பனை கலைஞர் சங்கீதா ஜெகநாதன் மெருகேற்றி இருந்தார்.

சில சிறப்பான காட்சிப்படுத்துதலும் இருந்தன. அதுவும் முருகன் ஈசனுக்கு பிரணவ மந்திரம் ஓதுதல், முப்பெரும் தேவியர்களின் சண்டை காட்சிகள், காவிரி விநாயக பெருமானால் தமிழகத்தில் விரிந்தோடியது, ஞானபழத்தை முருகன் பெறமுடியாமல் கோவத்தில் குன்றின் மீது அமர்தல், கங்கை சிவ பெருமானின் ஜடா முடியை அலங்கரித்தல், மோகினி அவதாரமாக விஷ்ணு பகவான் சிவனைக் காத்தல் மற்றும் இறுதியாக சிவபார்வதி திருக்கல்யாணம் என கண்ணிற்க்கு விருந்தாக இருந்தை விவரிக்க வார்த்தைகளில்லை.


இதில் விஷ்ணுவாக ராஜ், லட்சுமி தேவியாக அருணா, பிரம்மாவாக அருள், சரஷ்வதி தேவியாக சங்கீதா, முருகனாக மகேஷ், விநாயகராக ரவி, அவ்வையாக கெளரி, அகத்திய முனியாக தீபா, கங்கா தேவியாக ரிஷூ, மோகினியாக ரூப்ஷி, அரக்கனாக தினேஷ் என அனைவரும் சிறப்பாக பங்காற்றியிருந்தனர். குழந்தைக்ள் மித்ரா, ஜஷ்மிதாவை(தத்துவம் நாட்டிய பள்ளி) லாவன்யா, சந்நிதி, சம்ரிதி (கலாதாரா நாட்டிய பள்ளி) பயிற்ச்சி அளித்தனர், மற்றும் நால்வரும் இரவு விழித்து நடனமாடினர். கோயில் நிர்வாகம் அனைவரையும் பாராட்டி பரிசுகளை வழங்கியது.

ஜானகி தொடக்கம் மற்றும் முடிவுரை வழங்கினார். நாட்டியநாடகம் ஒருங்கினைப்பாளர் மற்றும் இயக்குனர் கார்த்திக்குக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். குறுகிய காலத்தில் இவ்வளவு சிறப்பாக ஒரு நாட்டிய நாடகத்தை வழங்க முடியுமா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதை யாராலும்மறுக்க முடியாது.


- தினமலர் வாசகர் கார்த்திக்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us