sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

கிழக்கு தில்லி சுப சித்தி விநாயகர் ஆலயத்தில் வித்யார்த்தி ஹோமம்

/

கிழக்கு தில்லி சுப சித்தி விநாயகர் ஆலயத்தில் வித்யார்த்தி ஹோமம்

கிழக்கு தில்லி சுப சித்தி விநாயகர் ஆலயத்தில் வித்யார்த்தி ஹோமம்

கிழக்கு தில்லி சுப சித்தி விநாயகர் ஆலயத்தில் வித்யார்த்தி ஹோமம்


பிப் 10, 2026

Google News

பிப் 10, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிழக்கு தில்லி சுப சித்தி விநாயகர் ஆலயத்தில் வித்யார்த்தி ஹோமம் நடைபெற்றது


கல்விக்கு அதிபதியாக நாம் அனைவரும் வணங்குவது சரஸ்வதி தேவியே. ஆனால் அந்த சரஸ்வதிக்கு ஒரு குரு உண்டு . அவரே ஞானகுருவான ஹயக்ரீவர். அம்பிகையின் நாமங்களை உலகுக்கு அகத்தியர் வாயிலாக லலிதா சஹஸ்ரநாமம் ஆக வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவரே.


ஞானத்தையும், பல்வேறு கலை, கல்விகளில் தேர்ச்சியையும், அறிவாற்றலையும் அருளும் மற்றொரு குரு தட்சிணாமூர்த்தி. ஆக கலைக்கும் ஞானத்திற்கும் கல்விக்கும் அதிபதியான மூன்று தெய்வங்கள்.


இந்திய கல்வி ஆண்டில் மாணவர்கள் வருடாந்திர தேர்வு நாளை எதிர்நோக்கும் இந்த சமயத்தில் அவர்களுக்கு மனோ தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கும் விதமாக கோவில்களில் மேற்சொன்ன தெய்வங்களின் ஹோமங்கள் பிராத்தனைகள் நடத்தப்படுகின்றன. அவ்விதமாக தில்லி மயூர் விகார் சுபசித்தி விநாயகர் ஆலயத்தில் வித்யார்த்தி ஹோமம் நடைபெற்றது.சுமார் ஐம்பது மாணவர்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டார்கள்.மாணவர்களுக்கு பூஜை பிரசாதத்துடன் எழுது கோலும் புத்தகமும் வழங்கப்பட்டது.பல தாத்தா பாட்டிகள் தங்கள் பேரக்குழந்தைகளுக்காக பங்கேற்றது காணக்கிடைத்த அரிய காட்சி . அனைவருக்கும் பிரசாதம் மற்றும் வாராந்திர அன்னதானம் நடைபெற்றது.


- தில்லியியிலிந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us