sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

124 மாணவர்கள் எழுதிய நூல்களை அவர்களே தொடர்ந்து 12 மணி நேரம் படித்து உலக சாதனை

/

124 மாணவர்கள் எழுதிய நூல்களை அவர்களே தொடர்ந்து 12 மணி நேரம் படித்து உலக சாதனை

124 மாணவர்கள் எழுதிய நூல்களை அவர்களே தொடர்ந்து 12 மணி நேரம் படித்து உலக சாதனை

124 மாணவர்கள் எழுதிய நூல்களை அவர்களே தொடர்ந்து 12 மணி நேரம் படித்து உலக சாதனை


டிச 14, 2024

Google News

டிச 14, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள கம்மிங் நகரில் தமிழ் எழுதப்படி பதிப்பகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கின்னஸ் வேர்ல்ட் ரெகார்டஸ் (Guinness World Records) ஒரு உலக சாதனை நிகழ்வு டிசம்பர் 7 2024 சனிக்கிழமை அன்று நிகழ்த்தப்பட்டது. 124 எழுத்தாளர்கள் தொடர்ந்து அவர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்து வாசித்தனர். இந்த நிகழ்வு தொடர்ந்து கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடந்து முடிந்தது.

இந்த சாதனையைப் படைத்த தமிழ் எழுதப்படி பதிப்பகம், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கற்பிக்கும் வட அமெரிக்காவை சேர்ந்த 4 பள்ளிகளுடன் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. குழந்தைகளுக்குப் படிக்கக் கற்றுக்கொடுக்க மிகக் குறைவான தமிழ் குழந்தைகள் புத்தகங்கள் இருப்பதைக் கவனித்து, அந்த இடைவெளியை நிரப்ப 2020 ஆம் ஆண்டு ஒரு பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினர். இதன் மூலம் பல புதிய எழுத்தாளர்கள் உருவாகினர். 2024 ஆம் ஆண்டு storybuzz.org என்ற இணைய தளத்தை ஆரம்பித்து இந்த எழுத்தாளர்களின் புத்தகங்களை இலவசமாக பதிவேற்றம் செய்தனர். இந்த உலக சாதனை மூலம் இந்த இளம் எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளிச்சத்துக் கொண்டுவரப்பட்டுள்ளது.


இந்த சாதனை நிகழ்வில் கம்மிங் தமிழ் பள்ளி, பிரெட் ரிக் தமிழ் பள்ளி, பீச் ட்ரீ தமிழ் பள்ளி, ஜேடிஎம் தமிழ் பள்ளி இணைந்து பங்கேற்றன. இந்த நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு துல்லியமாக 12/7/2024 அன்று காலை 7:48 மணிக்கு The Vine Community Churchல் தொடங்கியது. கடைசி மாணவர் மாலை 7:57 மணிக்கு வாசித்து முடித்தார். 12 மணி நேரம் 9 நிமிடங்களில் 124 மாணவர்கள் பங்கேற்று, 122 மாணவர்கள் ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று இலக்கை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.


இந்த நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. அயலகத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு இந்த சாதனை ஒரு புதிய நம்பிக்கையை கொடுக்கிறது. கடைசி மாணவர் வாசித்து முடித்த பிறகு, தொடர்ந்து நடந்த விருது வழங்கும் விழாவில் கின்னஸ் நடுவர் Most Authors Reading consecutively from their book என்ற இந்த வரலாற்று சாதனையை அறிவித்தார். சுமார் 450 பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். 4 பள்ளி தலைமை ஆசிரியர்களும் , எழுத்தாளர்களும் கின்னஸ் நிறுவனம் வழங்கும் பங்கேற்பு சான்றிதழைப் பெற்றனர்.


இந்த சாதனையை அடைவதற்காக கடினமாக உழைத்த ஒவ்வொரு எழுத்தாளரும் பாராட்டுக்குரியவர்கள். இந்த உலக சாதனையில் பங்கேற்ற அனைத்து எழுத்தாளர்களும் இதை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய தமிழ் எழுத படி பதிப்பக குழுவினரும் முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை தமிழ் கூறும் நல் உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளனர்.


Visit Storybuzz.org for Reading and writing your books



- தினமலர் வாசகி தீபா அகிலன்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us