sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரை கேளுங்கள்...

/

டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...


PUBLISHED ON : செப் 07, 2025

Google News

PUBLISHED ON : செப் 07, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதிவாணன், மதுரை: எனது வயது 50. டூ வீலரில் சிறிது துாரம் சென்ற பின் வீட்டிற்கு வந்தால் தொடர்ச்சியாக தும்மல் வருகிறது. இதற்கு காரணம் என்ன, தவிர்ப்பது எப்படி?

டூவீலரில் செல்லும்போது காற்றில் கலந்துள்ள துாசி, மாசு, புகை, மகரந்த துகள்கள் போன்றவற்றை சுவாசிக்கும் போது மூக்கினுள் அழற்சி ஏற்படுகிறது. இதனால் தும்மல், மூக்கடைப்பு, மூக்கிலிருந்து நீர்வடிதல், தலைவலி, கண்அரிப்பு, கண்களிலிருந்து நீர்வடிதல் ஏற்படலாம். இப்பாதிப்பு இருந்தால் உங்களுக்கு அலர்ஜி இருக்கலாம். அலர்ஜியை கண்டறிந்து மருந்துகள், மூக்கிற்கான ஸ்பிரே மூலம் தீர்வுகாணலாம். முகக்கவசம், தலைக்கவசம் அணிவதன் மூலம் இப்பிரச்னை குறைய வாய்ப்புள்ளது. முழு ரத்தப் பரிசோதனை மூலம் (ஐ.ஜி.இ.,) அலர்ஜியை கண்டறியலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.

- டாக்டர் பி.பிரேம் ஆனந்த், நுரையீரல் நோய் சிறப்பு நிபுணர், மதுரை.

தி.முருகுராஜேந்திரன், செம்பட்டி: உடல் பருமனை குறைக்க உணவு அளவை குறைப்பதால் தீர்வு ஏற்படுமா?

உடல் பருமனை குறைக்க அதிகத் திறன் செலவழிக்கும் உடற்பயிற்சி முறைகளை பலர் மேற்கொள்கின்றனர். இதன் அலட்சியத்தால் நரம்பு சார்ந்த பாதிப்புகள், மாரடைப்பு போன்ற உடனடி பக்க விளைவுகளால் இளம் வயதினருக்கு பாதிப்பு அபாயம் உள்ளது. இதை தவிர்க்க யோகா, இயற்கை மருத்துவ முறைகளை பின்பற்றலாம். உணவை தவிர்ப்பது நிரந்தர தீர்வை கொடுக்காது. 3 நேர உணவை குறைக்காமல், எடுத்து கொள்ளும் உணவு வகைகளின் தரத்தை அறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும். மித வேகத்தில் மேற்கொள்ளக்கூடிய மூச்சுப் பயிற்சி, யோகாசனங்கள், உணவு பழக்கவழக்கங்கள் மூலமே எளிதாக்கலாம். பருமன் குறைப்பு மட்டுமின்றி முதுகு தண்டு வடம், மூட்டுகள் போன்ற உடல் பாக இணைப்புகளில் ஏற்படும் வலிகளுக்கும் தனித்தனியே ஆசனங்கள் உண்டு. சிறு தானியம், நட்ஸ், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை எடுத்து கொள்வது நல்லது.

டாக்டர் சி.சிவகங்கா, ஆயுர்வேத மருத்துவர், சின்னாளபட்டி.

ஏ. சுகுமார், ராமநாதபுரம்: எனது மனைவி 7ஆண்டுகளுக்கு பின் தற்போது கருவுற்றிருக்கிறார். அவருக்கு ஸ்கேன் எடுப்பதால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

மருத்துவத்துறையில்அல்ட்ரா சவுண்ட், எம்.ஆர்.ஐ., சி.டி., ஆகியமூன்று விதமான ஸ்கேன் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் முறையில் சவுண்ட் வேவ்ஸ் பயன்படுத்தப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு குழுந்தைகளின் வளர்ச்சி குறித்து அறிய இந்த முறைசிறந்தது. இதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா, ஏதேனும் குறைபாடு உள்ளதாஎன்பதைஅறிய முடியும். இதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது.

முதுகெலும்பு, தண்டுவடம் சார்ந்த பிரச்னைகளுக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பயன்படுத்தப் படுகிறது. காந்த அலைகள் பயன்படுத்தப்படுவதால் இதிலும் கர்ப்பிணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. அதே நேரத்தில் அடிக்கடி எடுக்கக் கூடாது. சி.டி., ஸ்கேனில் எக்ஸ் ரே பயன்படுத்தப்படுவதால் கருவில் உள்ள குழந்தையின் திசுவில்பாதிப்பு ஏற்படக் கூடும். இதனால் கர்ப்பிணிகள் சி.டி., ஸ்கேன் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

எந்த ஸ்கேனாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரையுடன் எடுக்க வேண்டும்.ஸ்கேன் எடுக்கும் முன் சில மருந்துகள் கொடுப்பார்கள். அடிக்கடி ஸ்கேன் எடுத்தால்மருந்தால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

- டாக்டர் சின்னத்துரை, அப்துல்லா கதிரியக்க நிபுணர், ராமநாதபுரம்.

அபிநயா, சிவகங்கை: ரத்த சோகை கர்ப்பிணிகள் உடலை எப்படி பராமரிப்பது?

ரத்த சோகை ஒரு பொது வகை நோய். கர்ப்ப காலத்தில் இவை மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தாய் ஆரோக்கியமாக இருந்தால் தான் குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும். தற்போது உள்ள சூழலில் 100 பெண்களில் குறைந்தது 90 பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்படுகிறார்கள். காரணம் தற்போது பெண்கள் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது.

சத்தான உணவுகளை, காய்கறி தவிர்ப்பதால் ரத்த சோகை உருவாகிறது. பொதுவாக பெண்கள் இரும்புச்சத்து உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பீட்ரூட், முருங்கை கீரை, அத்திப்பழம், பேரிச்சம்பழம், மாதுளை உள்ளிட்டவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலில் ஹீமோகுளோபின் சரியாக பராமரிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் முறையான கால இடைவெளியில் டாக்டரிடம் ஆலோசனை பெற்று பரிந்துரைக்கக்கூடிய இரும்புச்சத்து மாத்திரைகளை சரியான இடைவெளியில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- டாக்டர் மு.தென்றல், மகப்பேறு மருத்துவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.



கலாராணி, கம்பம்: எனது தந்தைக்கு இதய நோய் பாதிப்பு இருந்தது. எனது மகனுக்கு பாதிப்பு வருமா?

ஹார்ட் அட்டாக் ஒருவருக்கு எப்போது ஏற்படும் என உறுதியாக கூற முடியாது. ஹார்ட் அட்டாக் ஏற்பட மன உளைச்சல், படபடப்பு, பயம் கொள்ளுதல், கோபம் உள்ளிட்டவை காரணங்களாகும். இதில் மன இறுக்கம் பிரதான காரணமாகும். படபடப்பு, இடது கை வலி, இடது மார்பு வலி, தலைசுற்றல் வந்தால் அது இதய நோய்க்கான அறிகுறி என உறுதியாக கூற முடியாது. இதுபோன்ற அறிகுறி இருந்தால், பதட்டம் அடையாமல் இதய நோய் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, அதிக கொழுப்பு, புகைப் பழக்கம், மது அருந்துதல் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும். ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்திருந்தால் இதய நோயிலிருந்து தப்பலாம்.

பரம்பரையில் பெற்றோர்களுக்கோ, உடன்பிறந்தவர்களுக்கோ இதய நோய் இருந்தால், உங்கள் பிள்ளைக்கும் இதய நோய் வருமா என்பது இன்னமும் உறுதி செய்யவில்லை. ஆனால் கவனமாக இருக்க வேண்டும். எக்கோ, இசிஜி, ஆஞ்சியோ, சிடி கொரோனரி பரிசோதனைகள் செய்து இதய நோய் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதய நோய்களை தவிர்க்க உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, பழங்கள், காய்கறிகள், கீரைகள் அதிகமாக எடுத்துக் கொள்வது, எண்ணெயில் பொரித்த உணவுகள், இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும்.

- டாக்டர் சையது சுல்தான் இப்ராகிம், சர்க்கரை, இதய நோய் சிறப்பு டாக்டர், கம்பம், தேனி.






      Dinamalar
      Follow us