ADDED : ஆக 10, 2015 03:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கோடி பணம் கிடைத்தாலும் மனிதன் பொய் சொல்வது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல வேண்டும்.
* கோடி பணம் கொடுத்தாவது நல்லோர்உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* கற்ற கல்வி கையளவு ஆகும். ஆனால், கற்க வேண்டிய விஷயமோ உலகளவு இருக்கிறது.
* வெள்ளை மனம் கொண்டோருக்கு, சிவந்த தாமரைமலரில் உறையும் திருமகளின் அருள் கிடைக்கும்.
* மனிதன் வருமானத்திற்கு ஏற்ப செலவிட வேண்டும்.
வருமானத்தை விட அதிகம் செலவு செய்தால் அறிவு அழியும். மானமும் போகும்.
-அவ்வையார்